Connect with us

நெல்சனை மீம் போட்டு கேலி செய்யும் நெட்டிசன்ஸ்- கொதித்தெழும் திரைவிமர்சகர்

Entertainment

நெல்சனை மீம் போட்டு கேலி செய்யும் நெட்டிசன்ஸ்- கொதித்தெழும் திரைவிமர்சகர்

கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான படம் பீஸ்ட். பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை மாறாக பலத்த சறுக்கலையே சந்தித்தது.

சன் பிக்சர்ஸ்க்கு வியாபார ரீதியாக மரண அடி கொடுத்தது. இது ஒரு புறம் இருக்க கமல் நடித்த விக்ரம் படம் கடந்த சில நாட்கள் முன் வெளியாகி பயங்கர வெற்றியை பெற்றது.

இதனால் மகிழ்ந்த கமல் , தனது இயக்குனரான லோகேஷ் கனகராஜ்க்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்தார். மேலும் விக்ரம் படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்கள் பலருக்கும் பைக் பரிசாக அளித்தார்.

இந்த படங்களை பார்த்த நெட்டிசன்கள் , நெல்சனுக்கு விஜய் கார் கொடுப்பது போல மீம்ஸ் கிரியேட் செய்தும் , மேலும் வெறும் பிரியாணியோட நிறுத்திட்டாரே எனவும் ட்ரோல் செய்தும் வருகின்றன.

இதை பார்த்த திரைப்பட விமர்சகர் பிரசாந்த், என்பவர்  நெல்சன் நேத்து வந்து , இன்னைக்கு இயக்குனர் ஆகல. பதினஞ்சு வருசம் வேர்வை , இரத்தம் சிந்தி தான் இந்த இடம். ஒரு சின்ன சருக்கலுக்கு அவர் என்னமோ தேச துரோகம் பண்ணுன மாறி மீம்கள் . ” வாழு, வாழவிடு” ன்னு புரோபைல்ல மட்டும் வச்சா போதுமாடா ? கொஞ்சம் நிஜ வாழ்க்கைலயும் கட புடிங்கடா  என மீம்ஸ் போடுபவர்களுக்கு எதிராக மாறியுள்ளார்.

பாருங்க:  போதை பொருள் ஆன்லைனில் விற்பனை -நடிகை நிலா கண்டிப்பு

More in Entertainment

To Top