Entertainment
13 வருடங்களுக்கு பின் மீண்டும் நடிக்கும் மோகன்
நடிகர் மோகன் 80களில் கொடிகட்டி பறந்தவர். 80களின் இறுதியில் வந்த உருவம் படத்துடன் இவரது படங்கள் எதுவும் வரவில்லை அதன் பின் நீண்ட வருடங்கள் நடிக்காமலே இருந்த இவர் 1999ம் ஆண்டு வந்த அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் நடித்தார் இப்படத்திற்கு தேவா இசையமைத்தார் படம் பெரிதாக போகவில்லை.
மீண்டும் 10 வருடம் இடைவெளிவிட்டு 2008ம் ஆண்டு சுட்டபழம் என்ற படத்தில் நடித்தார் அதுவும் பெரிதாக போகவில்லை.
தற்போது மீண்டும் 13 வருட இடைவேளை விட்டு மோகன் நடிக்க வந்துள்ளார் .
இவர் நடிக்க உள்ள படத்தை விஜய் ஸ்ரீ இயக்குகிறார். இவர் சாருஹாசன் நடித்த தாதா 87 படத்தை டைரக்டு செய்து பிரபலமானவர். படத்தின் தலைப்பு மற்றும் இதர நடிகர் நடிகையர் விவரங்களை புத்தாண்டில் வெளியிடுகின்றனர்.
