cinema news
உன்னைய போய் ஹீரோ ஆக்க நினைச்சேன் பாரு!…மைக் மோகன் செயலால் எரிச்சல் அடைந்த பாலசந்தர்…
“ஹரா” படத்தின் மூலமாக தமிழில் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் மோகன். படம் வெளிவந்த போது நெகட்டிவ் விமர்சனத்தையே பெற்றது. ஆனால் படத்தின் வசூலோ ஆச்சரியப்பட வைத்துள்ளது. தந்தை – மகள் பாசத்தை முன் வைத்து வந்துள்ளது “ஹரா”. தனது பழைய படங்களில் சண்டை காட்சிகளே இல்லாத கதைகளில் நடித்து வந்திருந்தார் மோகன்,
ஆனால் “ஹரா’விலோ கிட்டத்திட்ட ஆறேழு சண்டை காட்சிகள். தனது ட்ராக்கை மாற்றினாலும் மோகனின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இந்த படம் நிச்சயமாக விருந்து தான் என சொல்லப்பட்டது. படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாதவராக தான் இருந்தாராம் மோகன்.
கன்னட இசைகுழுவில் பாடல்களை பாடியவர் மோகன். அதோடு பாடல்களை பாடிக்கொண்டே மேடையில் நடனமாடுவாரம். இந்த தகவலை ‘பயில்வான்’ரெங்கநாதன் சொல்லியிருந்தார்.
கமல்ஹாசனை வைத்து தனது படத்தை இயக்க நினைத்தாரம் கே.பாலச்சந்தர். ஆனால் கமல் கடுமையான பிஸியில் இருந்தாராம். ஆறு மாதங்களுக்கு பிறகு தான் கால்ஷீட் என சொல்லி விட்டாராம்.
அதனால் மோகனை வைத்து அந்த படத்தை எடுத்து விடலாம் என நினைத்து அவரை அழைத்துள்ளார். மோகனும் பாலசந்தரை சந்தித்து தனது சம்மதத்தை சொல்லி விட்டாராம்.
இதனிடையே கன்னட படம் ஒன்றில் கமிட் ஆன மோகன் அந்த கேரக்டருக்காக தலையில் மொட்டையடித்து கொண்டாராம். மொட்டை கோலத்திலிருந்த மோகனை பார்த்த பாலசந்தருக்கு அடையாளம் தெரியவில்லையாம்.
யாருப்பா நீ என கேட்டாராம். சார் நான் தான் மோகன் உங்க படத்துல கூட நடிக்க சொன்னீங்களே என சொல்லி இருக்கிறார்.
இதை கேட்ட பாலசந்தர் யாரை கேட்டுட்டு மொட்டையடிச்ச. உன்னைய போய் ஹீரோவா ஆக்கனும்னு நினைச்சேன் பாரு என கோபமாக சொன்னாராம்.
மோகன் அந்த படத்திலிருந்து வெளியேற்றப்பட்டாராம். ஆறு மாதங்கள் கழித்து வந்த கமல் தான் ஹீரோவாக நடித்து படத்தை முடித்து கொடுத்தாராம். இந்த தகவல்களை நடிகரும், திரை விமர்சகரான ‘பயில்வான்’ ரெங்கநாதன் சொல்லியிருந்தார்.