பொதுவாக கடலுக்கு சென்றால் மிக மகிழ்ச்சியாக இருக்கும். கடல் அலையில் விளையாடுவது மிகவும் பிடிக்கும் அதுவும் சென்னை போன்ற பெருநகரங்களில் மெரினா கடற்கரைதான் பொழுதுபோக்கு.
அத்தகைய மெரினாவில் மாலை வேளையில் குடும்பத்துடன் செல்பவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என்றாலும் அவ்வாறு செல்லும் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையில் கால் நனைத்து விளையாட முடியாமல் இருப்பார்கள்.
அத்தகையவர்களுக்காக கடல் அலைகளில் கால் நனைக்க வேண்டும் என்பதற்காக புதிய திட்டத்தை முதல்வர் முக.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
இதற்காக மாற்று திறனாளிகளுக்காக முச்சக்கர வண்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.