cinema news
என் படத்தை பார்க்கல்லாம் நான் தியேட்டருக்கு போக மாட்டேன்!…ஒப்பனா சொன்ன மோகன்?…
“ஹரா” படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் மோகன் ரசிகர்கள். ரஜினி, கமல் உச்சத்தில் இருந்த நேரத்தில் சினிமாவில் நுழைந்தவர் இவர். பாடல்களால் தான் இவரது படங்கள் அதிகமாக வெற்றி பெற்றது என் சொல்லப்பட்டாலும். பாடல் காட்சிகளில் நடித்த இவரின் நடிப்பும் தான் என்று கூட சொல்லலாம்.
ராமராஜன் ஒரு பக்கம் கலக்கிக்கொண்டிருக்க, மோகன் ஒருபக்கம் வெளித்துவாங்க கொண்டாட்டம் யாருக்கு இதில் அதிகம் என்று பார்த்தால் அது ரசிகர்களுக்கு தான் என்று தான் சொல்லியாகவேண்டும். தொட்டது எல்லாம் வெற்றி என இவர்கள் இருவரின் திரை பயணம் சென்று கொண்டிருந்தது.
மாறிவிட்ட ரசிப்புத்தன்மையின் காரணமா? அல்லது வேறு என்னவாக இருக்கும்? என இன்றும் யோசிக்க வைத்து விட்டது இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவை விட்டு திடீரென காணாமல் போனது.
ராமராஜன் “சாமானியன்” மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துவிட்டார். அதே போல மோகனும் “ஹரா” வின் மூலம் ரீ-என்ட்ரிக்கு ரெடியாகி வருகிறார்.
மோகன் “கோட்” படத்திலும் இவர் இருப்பதாக சொல்லப்படுகிறது. தியேட்டருக்கு சென்று படம் பார்த்தால் எந்த படங்களையெல்லாம் பார்ப்பீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த மோகன் எம்.ஜி.ஆரின் “ஆயிரத்தில் ஒருவன்”, ரஜினியின் “பாட்ஷா”, கமல் நடித்த “நாயகன்” இந்த மூன்று படங்களுக்கு தான் முன்னுரிமை என சொல்லியிருந்தார்.
எத்தனையோ வெள்ளி விழா படங்களை கொடுத்திருந்தாலும் இந்த லிஸ்டில் தனது படங்களை பற்றி பெருமை அடிக்காமல் தன்னடக்கத்துடன் அவர் பேசியிருந்தார். அதே போல பெயர், புகழ் என வசதியாக வாழ்வதை விட மனிதனாக வாழ்வதே சிறந்தது எனவும் சொல்லியிருக்கிறார்.