cinema news
அந்த தப்பை நான் செஞ்சிருக்க கூடாது…மோகனை பாதித்ததா தொடர் தோல்வி?…
துவக்கத்தில் சினிமாவின் மீது அதிக ஆர்வமில்லாதவராக தான் இருந்து வந்திருக்கிறார் மோகன். கர்நாடகத்தை சேர்ந்த இவர் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். “கோகிலா” படத்தில் கிடைத்த அறிமுகத்தை தொடர்ந்து “பயணங்கள் முடிவதில்லை”, “கிளிஞ்சல்கள்” போன்ற படங்களில் நடித்தார். இவர் எதிர்பார்த்ததை விட படங்கள் அதிகமான வெற்றிகளை பெற்றது.
இதுவே இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க காரணமாக மாறியது. தொட்டதெல்லாம் வெற்றி என்ற இடத்தை வெகு சீக்கிரமாகவே அடைந்து விட்டார் மோகன்
தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்து இவரை பற்றிய ஒரு ரகசியம் வெளியானது தான் இவரது வீழ்ச்சிக்கு மிகப்பெரிய காரணமாக மாறியது.
தனது முதல் படத்தில் துவங்கி பல படங்களில் இவரது உண்மையான குரல் இது தான் நினைத்திருந்த நேரத்தில் தான் அது டப்பிங் வாய்ஸ் என தெரிய வந்தது. எஸ்.என்.சுரேந்தர் தான் இவருக்கு டப்பிங் பேசியவர்.
யாரோ கொளுத்திப்போட்ட வெடி இவர்கள் இருவரிடையே வெடித்தது. தனது குரலால் தான் மோகன் வெற்றிகள் பெற காரணமாக இருந்தது என சுரேந்தர் சொல்ல, இருவருக்கும் இடையே ஈகோ தலைவிரிக்க துவங்கியதாக சொல்லப்பட்டது.
அதன் பின்னர் மோகன் நடித்த படங்கள் அவரது குரலிலேயே வெளிவந்தது. அது பெரிதாக எடுபடாமல் போக படங்களும் அடி வாங்கியது. இது பற்ரி சமீபத்தில் பேசிய மோகன் நடிக்க வந்த நேரத்தில் தன்னை யாரும் சரியாக வழி நடத்தவில்லை.
வெளி மாநிலத்திலிருந்து வந்தவர் என்பதால் தன்னிடம் சொல்லமலலேயே டப்பிங் ஏற்பாடுகள் நடத்தப்பட்டது. தானும் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவிலை என சொன்னார்.
அதன் பிறகு தான் அதில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என தனகே தெரிய வந்ததாக சொல்லியிருந்தார். 12 ஆண்டுகளுக்கு பிறகு மோகன் நடித்துள்ள “ஹரா” படம் இப்போது வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.