cinema news
சிவாஜிக்கிட்ட ஜாடை பேசிய கே.எஸ்.ரவிக்குமார்?…பின்ன இதெல்லாம் எப்படி அவர்கிட்ட ஒப்பனா சொல்லமுடியும்…
நடிகர் திலகம் சிவாஜி, நடிப்பின் பல்கலைக்கழகம் என்றும் இவரை சொல்வர்கள். இவர் நடிக்கத்துவங்கிய நேரத்தில் இவரது ஆற்றல் அனைவரையும் அசர வைத்தது. இப்படி எல்லாம் கூட நடிக்க முடியுமா? என ஆச்சரியப்பட வைத்தவர். காலம் செல்லச்செல்ல இவரது நடிப்பு சிலரிடமிருந்து எதிர்மறை விமர்சனங்களை பெற்றது. நாகரீகமும் படம் பார்த்தவர்களின் எண்ணங்களும் அவரது நடிப்பினை ஓவர் ஆக்டிங் என்றெல்லாம் சொல்லவைத்தது.
ரசிகர்கள் இப்படி சொல்வது ஒரு புறம் இருந்தாலும், சினிமா கலைஞர்களே இதே போல ஓவர் ஆக்டிங் என சொல்லியதும் நடந்துள்ளதாக பிரபல குணச்சித்திர நடிகர் ‘மீசை’ ராஜேந்திரன் சிவாஜியை குறித்து பேசும்போது ஒரு தகவலை சொல்லியிருந்தார்.
ரஜினிகாந்த், சிவாஜி நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய “படையப்பா” பட ஷூட்டிங்கின் போது ஒரு காட்சி படமாகப்பட்டு கொண்டிருந்ததாம். அதில் சிவாஜி நடித்தது சற்று ஓவராக இருப்பதாக உண்ர்ந்த இயக்குனர், அதனை எப்படி சிவாஜியிடம் சொல்வது என திகைத்தாராம். அப்போது அங்கிருந்த லைட்-பாய்களிடம் சென்று வெளிச்சம் அதிமாக இருக்கிறது, இந்த சீனுக்கு இது ரொம்ப ஓவர் என சாடை மாடையாக சிவாஜியின் காதுக்கு கேட்கும்படி சொன்னாராம்.
இயக்குனர் சொல்வது அடுத்தவர்களுக்கு இல்லை தனக்குத்தான் என சிவாஜி உணர்ந்து கொண்டாராம். ரவிக்குமார் சிவாஜியிடம் சார் ஒன்-மோர் எடுக்கலாமா? என்று கேட்டதும் சரி போகலாம் எனச்சொல்லி அந்த காட்சியில் மீண்டும் நடித்துக்கொடுத்தாராம். இது தான் கே.எஸ்.ரவிக்குமாரின் சாமர்த்தியம் , ஒரு சீனியர் நடிகரிடம் எதை எப்படி நாசூக்காக சொல்ல வேண்டுமோ அப்படி சொல்லி யார் மனதும் நோகாதபடி தான் நினைத்ததை வெற்றிகரமாக முடிக்க முடியும் என்பதற்கு உதாரணமான் விஷயமும் கூட.