cinema news
நம்ம வேணும்னா இத செய்யலாமா!…ரஜினிக்கு ஐடியா கொடுத்த தயாரிப்பாளர்?…தலையசைப்பாரா தலைவர்?…
“வேட்டையன்”, “கூலி” என இரண்டு படங்களில் இப்போது கமிட்டாகி உள்ளார் ரஜினிகாந்த். “கூலி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளிவந்து தாறுமாறு ஹிட் ஆகியுள்ளது. படப்பிடிப்பில் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு ரஜினி துபாய்க்கு போயிருக்கிறார் என செய்திகள் சொல்கிறது.
தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் படங்கள் நல்ல வசூலை குவித்துத்தந்தது தயாரிப்பாளர்களை அதிகமாக யோசிக்க வைத்துள்ளது. “கில்லி” படைத்துக்கொடுத்த சாதனை அப்படி வசூலில். அஜீத் பிறந்த தினத்தன்று அவர் நடித்திருந்த “தீனா”, “பில்லா” படங்களும், வெளிநாடுகளில் “மங்காத்தா” படமும் வெளியாகி வசூலை வாரிக்குவித்து கொடுத்தது.
ரஜினியின் “படையப்பா” இதே போல ரீ-ரிலீஸ் செய்ய வாய்ப்பு உள்ளதா? என்ற கேள்விக்கு அதன் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், அதை பற்றி தான் முடிவு செய்ய முடியாது. படத்தின் தயாரிப்பு நிறுவனமான அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் தான் முடிவெடுக்க வேண்டும் என சொல்லியிருந்தார்.
படத்தின் இணை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீராஜலக்ஷ்மி ஃபிலிம்ஸ் தேனப்பன் துபாயில் வெகு ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். பேச்சுவார்த்தையினிடையே “படையப்பா” பற்றி சொன்னாராம் தேனப்பன். இப்போது இருக்கின்ற நேரத்தில் படத்தை ரீ-ரிலீஸ் செய்வது நல்லதாக அமையும் என ரஜினியிடம் தனது கருத்தினை சொல்லியிருக்கிறாராம்.இந்த தகவல்களை ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.
ஒருவேளைதேனப்பன் சொன்னதற்கு ரஜினி தலையசைத்து விட்டார் என்றால் ரஜினி ரசிகர்களுக்கு இந்த வருடம் சிறப்பானதாக அமைந்தே விடும். உலகம் முழுவதும் வெளியான முதல் தமிழ் படம் என்ற பெருமையை பெற்ற படையப்பா மீண்டும் ஒரு வசூல் வேட்டையை ஆடிக்கொடுத்து விஜய், அஜீத் பட ரீ-ரிலீஸ் ரெக்கார்டுகளை முறியடித்து ரஜினியின் மாஸை உறுதிப்படுத்திவிடும்.