cinema news
அவரு நாட்டாமை தான்…நான் மட்டும் என்ன குறைஞ்சவனா…கெத்து காட்டிய கவுண்டமணி!…
கவுண்டமணி தமிழ் சினிமா வரலாற்றில் காமெடி நடிகர்கள் வாங்கிடாத வகையில் அதிக பட்ச சம்பளத்தை வாங்கியவர். ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என வாங்கி கெத்து காட்டியவர்.
ரஜினி, கமல், அஜீத், விஜய், சத்யராஜ் பிரபு இப்படி யாருடன் நடித்தாலும் அவர்களுக்கு நிகரான வேடத்தை கேட்டு வாங்கி அதில் வெற்றி பெற்றவர்.
ரஜினி, கமல் கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கவுண்டமணியுடன் இணைவதை தவிர்த்தாக சொல்லபட்டது. கவுண்டமணியின் ஆதிக்கம் படத்தில் அதிகாமாக இருந்து வந்ததால் என ரஜினி, கமல் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்பட்டது.ஹ்ப்
கவுண்டமணியும், சரத்குமாரும் நிறைய படங்களில் நடிக்க இணைந்து நடித்துள்ளனர். “கட்டபொம்மன”, “சேரன் பாண்டியன்”, “மகாபிரபு” என அடுக்கிக்கொண்டே போகலாம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய “நாட்டாமை” படத்திலும் இவர்கள் இருவரும் நடித்திருப்பர். சரத்குமார் இரட்டை வேடமேற்று நடித்தார்.
செந்திலுடன் கவுண்டமணி அடித்திருந்த காமெடி லூட்டி காலம்காலமாய் நினைவில் நிற்கும். படத்தின் வெற்றிக்கு கதையும், திரைக்கதையும், இசையும் எப்படி காரணாமாக இருந்ததோ அதே போலத்தான் கவுண்டமணியின் நகைச்சுவையும் இருந்தது.
சரத்குமார் இரண்டு வேடங்களை ஏற்று நடித்திருந்தாலும் படத்தின் கதாநாயகனாகவே நடித்திருந்தாலும், கவுண்டமணிக்கும், அவருக்கும் ஒரே சம்பளம் தான் பேசப்பட்டதாம்
5 லட்ச ரூபாயாக நிர்ணயக்கபட்டு அதே தொகை இருவருக்கும் சம்பளமாக வழங்கப்பட்டதாம். எப்படி சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்தாரோ அதே போல கவுண்டமணியும் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.
இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட 5 லட்ச ரூபாய் தான் படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் வழங்கப்பட்டதாம். சம்பள விஷயத்தில் எப்போதுமே கெத்து காட்டியவராகத்தான் இருந்த வந்திருக்கிறார் கவுண்டமணி.