Connect with us

சீனை மாத்த சொன்ன பிரபலம்!…தயக்கம் காட்டிய ரமேஷ் கண்ணா?…இது வேணாம்னு அட்வைஸ் பண்ணின ரவிக்குமார்…

rameshkanna ravikumar

cinema news

சீனை மாத்த சொன்ன பிரபலம்!…தயக்கம் காட்டிய ரமேஷ் கண்ணா?…இது வேணாம்னு அட்வைஸ் பண்ணின ரவிக்குமார்…

ரமேஷ் கண்ணா இயக்குனராக தெரியப்பட்டதை விட நகைச்சுவை நடிகராகவே அறியப்பட்டவர். “வில்லன்”, “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்”, “ப்ரண்ட்ஸ்” படங்களை இவரது காமெடி நடிப்புக்கு உதாரணமாக சொல்லலாம். இவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்தவரும் கூட.

“படையப்பா” படத்தில் ரஜினியின் நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார். ரஜினியின் காதலை செளந்தர்யாவிடம் சொல்ல இவர் போராடும் காட்சிகளில் ரசிக்க வைத்திருப்பார். காமெடி ட்ராக் எழுதும் போது ரஜினிக்கு செளந்தர்யாவுடன் திருமணம் முடிந்த பிறகு காதலிக்கும் போது எழுதிய லவ் லெட்டரை கொடுப்பாராம் ரமேஷ் கண்ணா.

padayappa

padayappa

இதை கேட்ட ரஜினி, கார்த்திக்குடன் நீங்கள் நடித்த “உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்”  படத்தில் காமெடியன் என்பதையும் தாண்டி நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக நடித்திருந்தீர்கள்.

நீங்கள் சொல்வது போல லெட்டரை கொடுக்கும் காட்சியை வைத்தால் அது பெரிதாக எடுபடாது. அதானால் நான் சொல்லுவது போல காட்சியை எடுங்கள் என சொன்னாராம். ரஜினி சொல்வதை தட்ட முடியாமலும், தான் வடிவமைத்த காட்சியை மாற்று சொல்வதாலும் என்ன செய்வது என யோசித்தாராம் ரமேஷ் கண்ணா.

கே.எஸ்.ரவிக்குமாரும் ரஜினி சொல்வது போல காட்சியை மாற்றிட ரமேஷ் கண்ணாவை அறிவுறுத்தினாராம். ரஜினி சொன்னது போல லட்சுமி ராதாரவியிடம் நாளைக்கு உன் வீட்டுக்கு நிச்சயம் பண்ண வர்றேன்னு சொன்ன உடனே இனி இவர்கள் காதல் திருமணம் வரை போகாது என்பதை பேசாமலேயே லெட்டரை கிழித்து போடுவது மூலமாகவே சொல்லியிருப்பார் ரமேஷ் கண்ணா. படம் பார்தவர்களை உணர்ச்சி வசத்தால் உருக வைத்திருந்தது இந்த காட்சி.

More in cinema news

To Top