---Advertisement---

அடிச்சி தூக்கினாரா ஆதி?…பி.டி.சார் பட விமர்சனம்….

Published on: May 24, 2024
anika
---Advertisement---

கதாநாயகனாக மட்டுமல்லாமல் “பி.டி.சார்” படத்தில் இசையமைப்பாளராகவும் தனது பணியை தொடர்ந்து உள்ளார் ஹிப்-ஆப் தமிழா ஆதி. இசையமைப்பாளராக அவரது 25வது படம் இது. “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு” படத்தினை போலவே இதிலும் சமூகத்திற்கு தேவயான கருத்தை கையில் எடுத்து, தனது கதையை படமாக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் வேணு கோபால்.

கரீஷ்மா பர்தேசி, அனிகா சுரேந்திரன், பிரபு, பாக்யராஜ், பாண்டியராஜன், தியாகராஜன், வினோதினி, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ள “பி.டி.சார்” படத்திதை வேல்ஸ் இண்டர்நேஷனல் ஐசிரி கணேசன் தயாரித்திருக்கிறார். தான் உண்டு, தனது வேலை உண்டு என வாழ்ந்து வருபவர் நாயகன் ஆதி. தியாகராஜனின் பள்ளிக்கூடத்தில் பி.டி.வாத்தியாராக சேர்கிறார்.

தனது மாணவியான அனிகாவிற்கு நேர்ந்த கொடூரத்தை கண்டு ஆத்திரப்படுகிறார் ஆதி.

anikha
anikha

எதற்காக போராடுகிறார் என்பதை சொல்ல ஒரு ஃப்ளாஷ் பேக், அதில் எப்படி வெற்றி பெருகிறார் என்பதே படத்தின் கதை. ஆதி நடிப்பில் தேரிவருகிறார் என்பது தெரிந்துள்ளது. அனிகா நடிப்பில் அசத்தியிருக்கிறார். குழந்தை நட்சத்திரமாக பார்த்தே பழக்கப்பட்டவர் பக்குவமான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

கொஞ்ச நேரம் மட்டுமே வந்தாலும் வழக்கம் போல ஸ்கோர் பண்ணிவிட்டார் பிரபு. தியகராஜன், பாண்டியராஜன்  இருவரின் பங்களிப்பு சிறப்பு. பாக்யராஜை இன்னும் வேலை வாங்கியிருக்கலாம் போலயே என நினைக்க வைக்கிறது. படத்திற்கு ஒளிப்பதிவு, பின்னனி இசை பலம்.

பாடல்கள் பெரிதாக மனதில் நிற்கவில்லை என சொல்கிறார்கள். திரைக்கதையில் வேகம் இருந்தாலும், ஆங்காங்கே சிறு தொய்வு தெரிகிறது படத்தில். இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம் கதையை எனவும் நினைக்க வைக்கிறது.

கோடை விடுமுறை முடிவுக்கு வரும் நேரத்தில் வெளிவந்துள்ளது படம். “பி.டி.சார்” தேவையில்லாமல் பிரம்பை கையில் எடுக்கவில்லை. அதே போல பெண் கொடுமையில் ஈடுபடுகிறவர்களுக்கு சவுக்கடி கொடுப்பது போல படம் வந்திருப்பது பாராட்டுதலுக்குரியது. ஒரு முறையாவது படத்தை  பார்த்துவிட வேண்டும் என்று தான் சொல்ல வேண்டும். மொத்தத்தில் இந்த “பி.டி,சார்” மனதில் இடம் பிடிக்கிறார்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official theatrical release announcement poster for Basil Joseph and Akshay Kumar's Raawadi.

கிறிஸ்துமஸ் ரேசில் அதிகாரப்பூர்வமாக களமிறங்கும் ‘ராவடி’: டிசம்பர் 24-ல் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் அதிரடித் திரைப்படம்!

Special international re-release promotional poster for Thalapathy Vijay's Thirupaachi in France.

பிரான்ஸில் வெளியாகும் ‘திருப்பாச்சி’: அக்டோபர் 2-ம் தேதி பிரெஞ்சு திரையரங்குகளில் தளபதி விஜய்யின் கல்ட் கிளாசிக் ரீ-என்ட்ரி!

File photos of veteran actresses Radha and Ambika.

தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சி: நடிகை அம்பிகா மீது ரூ. 46 கோடி மோசடி புகார் அளித்த சகோதரி ராதா: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு!

Young champion Dheeran holding his Taekwondo Gold Medal at the ISSO Games.

நடிகர் சிபி சத்யராஜின் குடும்பத்தில் பெருமித தருணம்: ISSO விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்ற இளம் வீரர் தீரன்!

Scenic shooting location in Tenkasi for Raju Jeyamohan's directorial AlmostNallavan.

ராஜு ஜெயமோகன் இயக்கத்தில் ‘ஆல்மோஸ்ட் நல்லவன்’: தென்காசியில் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு!

Actor Allu Arjun and Director Atlee holding the Guinness World Records certificate for Raaka.

கின்னஸ் சாதனை படைத்த அல்லு அர்ஜுன் – அட்லீயின் ‘ராக்கா’: உலக அரங்கில் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க பெருமை!