---Advertisement---

ரஜினியிடம் பாராட்டு பெற்ற டேனியல் பாலாஜி!…மறைந்தாலும் மனதை விட்டு நீங்காதவர்…

Published on: May 23, 2024
rajini daniel
---Advertisement---

“வேட்டையாடு விளையாடு” படத்தின் மூலம் அறிமுகம் பெற்றவர் டேனியல் பாலாஜி. படத்தில் கமலுக்கு நிகராக நடித்து பாராட்டுக்களை பெற்றிருந்தார். மறைந்த நடிகர் முரளியின் சகோதரராவார் இவர், சில படங்களில் மட்டுமே தலையை காட்டியிருந்திருப்பார் இவர்,

மாரடைப்பால் மரணமடைந்த டேனியல் பாலாஜி தனது வாழ்வில் மறக்க முடியாத பாரட்டினை பற்றி பேசியிருந்தார் ஒருமுறை. “வேட்டையாடு விளையாடு” படத்தை பார்த்த ரஜினிகாந்த் தன்னை மனதார பாராட்டியது தான் தனது வாழ்நாளில் மறக்க முடியாத ஒன்று என சொல்லியிருக்கிறார். படம் பார்த்து விட்டு வெளியே வந்து படக்குழுவுடன் பேசிக்கொண்டிருந்தாராம் ரஜினி.

daniel balaji
daniel balaji

அப்போது தனது பெயரை குறிப்பிட்டு யார் அந்த பையன் நல்லா நடிச்சிருக்கானே என சொல்லிக்கொண்டிருந்தாராம். ரஜினியை விட்டு சற்று தொலைவாக நின்று  கொண்டிருந்த டேனியல் பாலாஜியை அழைத்து ரஜினிக்கு அறிமுகம் செய்யப்பட்டதாம். படத்தின் தோற்றத்திலிருந்து வேறுபட்டு, முடிகளை வெட்டி தனது தோற்றத்தை முற்றிலுமாக மாற்றியபடி ரஜினி முன் நின்றவரை பார்த்து இவரா அது என ஆச்சரியத்தோடு கேட்டாராம்.

பின்னர் டேனியல் பாலாஜியின் தோளின் மீது கை வைத்த படியே வெகு நேரம் பேசிவந்தாராம். தன்னை பற்றிய விவரங்களை கேட்டுத்தெரிந்து கொண்ட ரஜினி காரில் ஏறச்சென்றாராம். திடீரென டேனியல் பாலாஜியை நோக்கி வந்து நான் இங்கிருந்து செல்கிறேன் பார்ப்போம் என சொல்லிவிட்டு வாழ்த்திவிட்டு சென்றாராம். “காக்க காக்க”, “பைரவா” படங்களிலும் இவர் வில்லனாக நடித்திருந்தார். கெளதம் வாசுதேவ் மேனனுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்த அவரின் அனேக படங்களில்  நடித்திருந்தார்.