ரஜினியும், கமலும் திரையையும் தாண்டி நல்ல நண்பர்களாகவே இருந்து வருகிறார்கள். இருவரும் சம கால போட்டியாளர்களாக இருந்த போதிலும். ரஜினி தனது படங்களுக்கு தேவையான டிப்ஸ்களை கமலிடம் இருந்து வாங்கிக்கொள்வேன் என நிறைய முறை சொல்லியிருக்கிறார்.
ரஜினி நடித்த மெஹா ஹிட் படமான “படையப்பா” எடுத்து முடித்த பிறகு பார்த்த போது படத்தின் நீளம் அதிகமாக இருந்ததாம். எந்த காட்சிகளை வெட்டி எடுத்து படத்தின் நேரத்தை குறைப்பது என தெரியாமல் தவித்து வந்திருக்கிறார்கள்.

வழக்கம் போல கமலிடம் ரஜினி ஐடியா கேட்டு பேசியிருக்கிறார். அதோடு இந்த படத்தில் இரண்டு இன்டர்வெல் ப்ளாக் வைக்க போகிறேன் என்றிருக்கிறார்.அதெல்லாம் எடுபடாது ரஜினி, ரசிகர்கள் அவ்வளவு பொறுமையாக பார்க்க மட்டாங்க என கமல் அட்வைஸ் செய்திருக்கிறார்.
பின்னர் கே.எஸ்.ரவிக்குமாரை அழைத்த கமல் படத்தில் எந்த சீன்கள் படத்தின் ஸ்பீடை குறைக்கிற மாதிரி இருக்குன்னு பாருங்க, அதை எல்லாம் வெட்டி எடுத்திருங்க. ரஜினி இல்லாத நேரத்துல அவருக்கு தெரியாம இதை செய்யுங்க. எடிட்டிங் முடிஞ்சதுக்கு அப்புறமா ரஜினிகிட்ட போட்டு காட்டிக்கிடலாம் என ஐடியா கொடுத்திருக்கிறார்.
அவர் சொன்னது போலவே செய்து விட்டாராம் ரவிக்குமார். அதனாலும் “படையப்பா” படம் இந்த அளவு ஹிட் ஆக கமலும் ஒரு காரணம் தான் போல. வெளி நாடுகளில் ரிலீஸான முதல் தமிழ் படம் என்ற சாதனையோடு, அதிக கலெக்ஷ்ன் குவிச்ச படமாக மாறியது “படையப்பா”. இந்த தகவல்களை ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக இருந்த குணச்சித்திர நடிகர் ரமேஷ் கண்ணா சொல்லியிருந்தார்.