cinema news
கூலிங் கிளாஸ் கை ஃபுல்லா டேட்டூ…அஜீத்தை வைத்து தரமான சம்பவம் கொடுக்க காத்திருக்கும் ஆதிக்?…
“குட்பேட்அக்லி” படத்தினுடைய அப்டேட் நேற்று வெளியானதிலிருந்து அஜீத் ரசிகர்கள் கொண்டாட்டத்தின் உச்சிக்கே சென்றுள்ளனர். பிறகு அதெப்படி சும்மா விடுவார்கள்?, பல நாட்களாக “விடாமுயற்சி” படத்தை பற்றி ஏதாவது ஒரு சின்ன தகவலாவது கசியுமா? அதை எப்படி கொண்டாடலாம் என காத்திருக்கும் போது பொங்கலுக்கு எ.கே. திரையில் வரப் போகிறார் என்கின்ற செய்தியை கேட்டதுமே அவர்களை எப்படி கட்டுப்படுத்துவது?.
நேற்று வெளியான அப்டேட்டில் க2025 பொங்கலுக்கு படம் வெளியாகும் என உறுதி சொன்னதோடு மட்டுமல்லாமல், அஜீத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருந்தார்கள். செம ஸ்டைலாக இருக்கிறார் அஜீத் என்றே சொல்லலாம். பச்சைசட்டையை அணிந்தபடி மூன்று விதமான அஜீத்தை காட்டியிருக்கிறார்கள் அந்த புகைப்படத்தில்.
கை முழுவதும் டாட்டூவை ஒட்டி இருக்கிறார் அஜீத்குமார். எப்பவும் போல அவரது ட்ரேட் மார்க்கான கூலிங் கிளாசையும் அனிந்திருக்கிறார். இதை பார்த்த பிறகு ரசிகர்களுடைய ஆவலின் அளவு எங்கோ எகிறி வருகிறது.
படத்தை தீபாவளிக்கே ரிலீஸ் பண்ணுங்களேன்னு தயாரிப்பாளரிடம் சொல்லும் அளவுக்கு தான் ரசிகர்களோட மனநிலை இருந்து கொண்டு வருகிறது. ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரில் வசனங்கள் எதுவுமே இல்லை. படம் தரை லோக்கலாக இருக்கலாம் என எதிர்பார்ப்பில் உள்ளனர் அஜீத்குமாரின் ரசிகர்கள்.
நிச்சயமாக இந்த படத்தில் ஆதிக் ரவிச்சந்திரன், அஜீத்தை வைத்து மிகப்பெரிய தரமான சம்பவம் செய்யப் போகிறார் என்பதே ரசிகர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. ஆனால் அந்த படத்தில் அஜீத் செய்துள்ள ஒரு செய்கைகு கொஞ்சம் எதிர்மறையான விமர்சங்கள் வரத்துவங்கி உள்ளது. ஆனாலும் இந்த போஸ்டருக்கு நல்ல வரவேற்பே கிடைத்துள்ளது என்றும் சொல்லலாம். அஜீத் முன்னிருக்கும் மேஜையில் துப்பாக்கிகள் இருப்பதை பார்க்க முடிகிறது. இதனால் படம் கேங்க்ஸ்டர் படமாக கூட இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.