கோடம்பாக்கத்தில் இப்போதைய அதிகாமான பேச்சுக்கள் அஜீத், விஜய் இவர்கள் இருவரை பற்றி தான் இருந்து கொண்டே இருக்கிறது. நடிகர், கட்சித் தலைவர் விஜயை பற்றிய செய்திகள் வரும் நேரத்தில் நடிகர், கார், பைக் ரேஸர் என அஜீத் பற்றிய அப்-டேட்டுகள் அடிக்கடி லீக் ஆகி வருகிறது.
“விடாமுயற்சி” பற்றிய அப்-டேட் இன்று வருவதாக ஒரு செய்தி வந்தது நேற்று. இதனை அதிகமாக எதிர்பார்த்து காத்திருந்தார்கள் அஜீத் ஃபேன்ஸ். நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்ற மாதிரி தான் “குட் பேட் அக்லி” படத்தை பற்றிய அடுத்த இன்ஃபர்மேஸன் ஒன்றை அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா கொடுத்திருப்பதாக நியூஸ் ஹாட்டாக பரவி வருகிறது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வருகிற பொங்கலுக்கு வெளியிட ஷூட்டிங் தீவிரமாக நடந்து வரும் படம் “குட் பேட் அக்லி”. மூன்று லுக்களில் இருக்கும் அஜீத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வெளியானது.

சில நாட்களுக்கு முன்னர் தான் படத்தின் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியாகி மகிழ வைத்தது. அதே மாதிரி தான் இன்று காலையிலிருந்து வலம் வருகிறது அடுத்த அப்-டேட்.
“குட் பேட் அக்லி”யில் அஜீத் நடிக்க வேண்டிய சோலோ ஆக்சன் காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டு விட்டதாம். தேவி ஸ்ரீபிரசாத் ஒரு பாடலுக்கான கம்போசிங் முடித்திருக்கிறார்.
அதே தென் அமெரிக்காவில் ஷூட்டிங் நடத்தப்படும் எனவும், வருகிற ஜூலை மாதம் இருபதாம் தேதி முதல் ஷூட்டிங்கின் அடுத்த ஷெடியூல் ஆரம்பிக்கும் எனவும் சுரேஷ் சந்திரா அப் – டேட் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.











