“விடாமுயற்சி” தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிவிடும் என்கின்ற நம்பிக்கை பிறந்து விட்டது கடந்த சில நாட்களாக அஜீத் ரசிகர்களுக்கு. அஜர்பைஜானுக்கு அஜீத் கிளம்பிவிட்டார் என்ற செய்தி வந்ததுமே அப்பாட நல்ல ட்ரீட் இருக்கு நமக்கு என பெருமூச்சு விடத்துவங்கினர் ஏ.கே.ஃபேன்ஸ். அது போதாது என ரேஸ் காரில் அஜீத் பறக்கும் வீடியோ வேற வைரலானது.
அல்டிமேட் லுக்கில் அஜீத்தின் ஃபோட்டாக்களும் மின்னல் வேகத்தில் பரவியது. இது ஒரு பக்கம் இருக்க “குட் பேட் அக்லி” படமும் வேகமாக வளர்ந்து வருகிறதாம். முதல் ஷெடியூல் ஷூட்டிங் முடிவடைந்து விட்டதாக சொல்லப்பட்டது.
அடுத்த கட்டம் குறித்த தகவல்கள் எப்போது வரும் என எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. படத்தின் பெயர் அறிவிப்பும், ரிலீஸ் டேட் டீடெய்ல்சும் ஒரே நாளில் வெளிவந்தது.
அதன் சூடு தனிவதற்குள்ளாக அஜீத்ன் ஃபர்ஸ்ட் லுக் பிக்சர் வந்து இணையத்தை அதிரவைத்தது. ஒரு அஜீத் என்றாலே பூமியை பிளக்க வைத்து விடுவார்கள் அவரது ரசிகர்கள். இந்த படத்தில் மூன்று ரோல்கள் வேறயாம். அப்புறம் என்ன அதகளப்படுத்தி விட்டார்கள் ஆன்-லைனில் வந்து அன்றைய நாளில்.
இன்று மாலை அடுத்த அப்-டேட் வர இருப்பதாக வந்திருக்கிறது ஹாட் நியூஸ். அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவின் வலைதள பக்கத்தில் டுடே சிக்ஸ் ஃபார்டி ஜிபியு -2 ( Today 6.40, GBU 2) என பதிவிட்டுள்ளார். ஜிபியு என்றால் “குட் பேட் அக்லி” யே தான். இந்த டுவீட் அஜீத் ஃபேன்ஸை ஆறு மணிக்கே ஆன்-லைனுக்கே வரவழைத்து விடும் நிச்சயமாக. அடுத்தது என்ன சாயங்காலம் சரவெடி தான் இன்றைக்கு.