Latest News
விஜய் பைக்ல வந்தா நான் கார்ல வருவேன்…அல்ட்ரா மார்டன் லூக்கில் அஜீத்!…
விஜயின் 50தாவது பிறந்த நாள் ஸ்பெஷலாக “கோட்” படத்தின் டீஸர் இன்று வெளியிட்டது படக்ககுழு. அதில் டபுள் ஆக்சன் விஜய் பைக்கில் செல்லும் காட்சிகள் வந்திருக்கிறது. பொதுவாக பைக் ரேஸ், சேசிங் சீன் என்றாலே அஜீத் தான் நினைவுக்கு வருவார் தமிழ் சினிமாவில்.
விஜய் பைக்கில் வரும் டீஸர் வைரல் ஆகிவருகிறது. அதே நேரத்தில் அஜர்பைஜான் நாட்டிற்கு சென்றுள்ள அஜீத், ரேஸ் கார் ஓட்டும் பிக்சர்களும் வைரலாகி வருகிறது.
ரேஸ்ர்களுக்கான பிரத்யேக உடையில் கூலிங் கிளாஸ் அணிந்த படி வந்திருகிறது இந்த ஃபோட்டோக்கள்.
“விடாமுயற்சி” படத்தை எப்படியாவது தீபாவளிக்கு வெளியிட்டே தீர வேண்டும் என்ற முனைப்போடு ஷூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே படத்தின் 20-30 சதவீதம் ஷூட் மட்டுமே பாக்கி இருப்பாதாக அர்ஜூன் சொல்லியிருந்தார். திடீரென அஜீத் அஜர்பைஜான் புறப்பட்டு சென்று விட்டார்.
ஆனால் இப்போது வலை தளங்களில் ஆதீக்கம் செய்து வருவது ஸ்போர்ட்ஸ் காரில் அஜீத் செல்லும் விடியோவும், போட்டோவும் தான்.
“கோட்” பட அப்-டேட், விஜய் பிறந்த நாள் என அதகள பட்டு வருகிறது விஜய் ரசிகர்களின் கூடாரம். அதே நேரத்தில் அஜீத்தின் அல்ட்ரா மார்டன் லுக் படங்கள் மற்றொரு பக்கம் அவரது ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது.
அதோடு விஜயின் “கோட்” பட ரீலீஸ் தேதி வெளியாகி உள்ள நிலையில், அஜீத்தின் தனிப்பட்ட புகைப்படங்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது.
இதே போல “குட் பேட் அக்லி”, “விடாமுயற்சி” படங்கள் பற்றிய அப்-டேட்டுகளாக அதன் பிக்குகள் வந்தால் இன்னும் சந்தோஷம் கூட தான் செய்யும் என நினைக்கிறார்கள் அஜீத் ஃபேன்ஸ்.