cinema news
சத்யராஜும் மணிவண்ணனும் அடித்த டபுள் செஞ்சரி!…அமைதிப்படைக்கு நோ சொன்ன வில்லன்?…?…
சத்யராஜ், மணிவண்ணன் இவர்கள் இருவரினிடையே இருந்த கெமிஸ்ட்ரி தமிழ் சினிமாவில் பெரிதாக ஒர்க் அவுட் ஆனாது. சீரியஸான சீன் கூட இவரக்ள் இருவரின் நடிப்பில் பார்த்தால் அது கூட ஜாலியாக தான் தெரியும். அந்த அளவு இவர்களின் காம்போ இருந்தது.
“பாலைவன ரோஜாக்கள்”, “விடிஞ்சா கல்யாணம்” இந்த இரண்டுமே இயக்குனர் மணிவண்ணன் படைப்புகளே. இதில் கதாநாயகன் சத்யராஜ். இந்த இரண்டு படங்களும் ஒரே தீபாவளி தினத்தன்று தான் வெளிவந்தது. இரண்டுமே சூப்பர் ஹிட் ஆனது. இது போன்ற சம்பவம் தமிழ் சினிமாவில் அதிகமாக நடந்தது கிடையாது. நடப்பதற்கு அரிதான விஷயமே இது பார்க்கப்பட்டது.
இவர்கள் இருவரின் மிகப்பெரிய வெற்றி படைப்பு “அமைதிப்படை” படத்தில் சத்யராஜை வில்லனாக்க நினைத்த மணிவண்ணன் அதை அவரிடம் சொல்ல. நல்ல மார்க்கெட் இருக்கின்ற நேரத்தில் எதற்கு போய் நெகட்டிவாக நடித்துக்கொண்டு என சத்யராஜ் நினைத்தாராம். மணிவண்ணனிடம் கதை பிடிக்கவில்லை என சொல்லி தப்பித்து விடலாம் என்ற முடிவினை தனக்குள்ளே வைத்துக்கொண்டு கதையை கேட்டாராம்.
தேர்தலில் வெற்றி பெற்று சத்யராஜ் முதலில் மணிவண்ணனுக்கு பயந்து கொண்டு சேரில் மெதுவாக உட்காரும் சீனை பற்றித்தான் சொன்னாராம் ஆரம்பத்திலேயே இயக்குனர். கேட்டதும் படத்தில் நடிக்கவே வேண்டாம் என நினைத்தவர் இந்த படம் தனது கையை விட்டு போய் விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும் என நினைத்து தனது முடிவை மாற்றிக்கொண்டாராம்.
மணிவண்ணன் இரண்டாவது பாதியின் கதையை சத்யராஜிடம் சொல்ல நினைக்க அதெல்லாம் வேண்டாம் ஷூட்டிங்கை ஆரம்பிங்க என உறுதியாக சொன்னாராம் படத்தில் அமாவாசையாக பின்னை நாகராஜ சோழனாக மாறும் சத்யராஜ். அவர் கடைசி நிமிடத்தில் மட்டும் தனது முடிவை மாற்றி நடிக்க சம்மதிக்காமல் போயிருந்தால் “அமைதிப்படை”யை ரசித்த விதம் மாறி கூட அமைந்திருக்கலாம்.