Latest News
எல்லோரும் ரெடியா மாமே?…வந்தாச்சு அப்-டேட்…தார தப்பட்ட கிழியப்போகுது…
மைத்ரி மூவீஸ் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்து வரும் படம் “குட் பேட் அக்லி”. இதன் படப்பிடிப்பு “விடாமுயற்சி”யை விட வேகமாக நடந்து வருகிறது.
“துணிவு”படத்திற்கு பிறகு அஜீத்தை திரையில் பார்க்காமல் ஏக்கத்தில் இருந்த வருகின்றனர் அவரது ரசிகர்கள். பெயர் அறிவிப்பு வெளிவந்த பிறகு எந்த தகவலுமே இல்லாமல் கிடப்பில் போடப்பட்டதாக மாறியிருந்தது “விடாமுயற்சி”.
ஒரு வழியாக இதன் ஷூட்டிங் இறுதி கட்டத்தினை நெருங்கி விட்டதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது.”விடாமுயற்சி”யில் ஏற்பட்ட தாமதத்தால் அஜீத், ஆதிக்வுடன் கை கோர்த்தார். வருகிற பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது “குட் பேட் அக்லி”.
அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் “குட் பேட் அக்லி” பற்றிய அப்-டேட் வெளியாகும் என பதிவிட்டுருந்தார்.அவர் சொன்னது போல அஜீத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டது.
அஜீத் கூலிங் கிளாஸ் அணிந்து படியாக இருக்கிறது . மாஸான லுக், எப்பவும் போல ஸ்டைலான ஏ.கே. ஃபோட்டோவிற்கு பின்னால் ‘காட் ஃப்ள்ஸ் யூ மாமே ( God Bless U Mamae) என இருக்கிறது.
வலது கையில் டாட்டூவுடன், இரண்டு விரல்களை காட்டி, தனது நாக்கை மடக்கி போஸ் கொடுத்திருக்கும் செகன்ட் லுக் பிக் வந்ததோடு.2025 பொங்கல் வெளியீடு, பட வேலைகள் நடந்துவருகிறது என ஆங்கிலத்தில் குறியீடும் விடப்பட்டுள்ளது.
விஜய் பர்த் டே அன்று வெளியான அஜீத்தின் கார் ரேஸ் பிக்சர்களை வைத்தே சம்பவம் செய்திருந்தனர் ஏ.கே.ஃபேன்ஸ். இந்நேரம் காட் ப்ள்ஸ் யூ சோசியல் மீடியாஸ் என சொல்ல வைத்து லைக், ஷேர், வியூஸ் என கதற வைத்து விடுவார்கள் அஜீத்தியன்ஸ்.