Published
1 year agoon
செல்வராகவன் முதலில் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து மணந்து கொண்டார். பின்பு அவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டது பின்னர் அவரை விவாகரத்து செய்துவிட்டு கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நேரத்தில் சமீபத்தில் செல்வராகவன் போட்ட டுவிட் ஒன்று வைரலாகியது.
தனிமையில் இருப்பதுதான் சந்தோஷமாக இருக்கிறது என ஏதோ ஒரு காரணத்தால் அவர் டுவிட் போட அதை பெரிய பரபரப்பாக்கி விட்டது மீடியாக்கள். செல்வா விவாகரத்துதான் செய்யப்போகிறார் என கிளப்பிவிட, அவர்களுக்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் மனைவியுடன் குளோஸ் ஆக அன்பாக இருக்கும் புகைப்படத்தை செல்வராகவன் பகிர்ந்துள்ளார்.
எனக்கு அதிகாலையில் உடன் இருப்பவள் எனது கிசு கிசு நாயகி என செல்வராகவன் டுவிட் செய்துள்ளார்.