cinema news
ஓ மை காட் இவங்களுக்கு இந்த திறமை இருக்குதா!..கால்குலேஷன் மிஸ் ஆகி போச்சோ?…
நாம் திரையில் நடிகர்களாக மற்றும் பார்த்து வருபவர்களுக்கு மிகப்பெரிய இன்னொரு முகமும் இருக்கிறது என்பதை கேட்பதற்கு ஆச்சரியமாக கூட இருக்கலாம். “மாயாண்டி குடும்பத்தார்” படத்தில் நடித்த தருண் கோபி விஷால் நடித்து வெற்றியடைந்த “திமிரு”, சிம்பு நடித்த “காளை” படங்களையும் இயக்கியவர் என்பது பலருக்கு தெரிந்திருக்கலாம், தெரியாமல் கூட இருந்திருக்கலாம்.
அதேபோல “வேட்டைக்காரன்” படத்தில் விஜய்க்கு நண்பராக வந்திருப்பார் ஸ்ரீநாத். இவர் “நாளைய தீர்ப்பு” படத்திலும் விஜய்க்கு நண்பராக நடித்திருப்பார். இவர் இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார் “முத்திரை”, சந்தானம் நடித்த “வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்” இவை இரண்டும் ஸ்ரீநாத்தின் படங்களே.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகராக மட்டுமே பார்க்கப்படுபவர் ரமேஷ் கண்ணா. அவரும் ஒரு இயக்குனர் என்பது பலருக்கும் தெரியாமலே கூட இருந்திருக்கலாம். அஜீத், ஹீரா, தேவயானி நடிப்பில் வெளியான “தொடரும்” படத்தை இயக்கியது இவர். அதோடு மட்டுமல்லாமல் “அவ்வை சன்முகி” படத்தில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்து இருக்கிறார். சில படங்களுக்கு திரைக்கதையும், வசனமும் எழுதியுள்ளார்.
விஜய் ஆண்டனி நடித்த “பிச்சைக்காரன்” படத்தில் கருப்பு பணம் குறித்த வசனத்தை பேசியிருந்தவர் கோவிந்த மூர்த்தி. இவர் “கருப்பசாமி குத்தகைக்காரர்”, “வெடிகுண்டு முருகேசன்”, “பப்பாளி” படங்களை இயக்கியிருக்கிறார். “அங்காடி தெரு” படத்தில் நடித்திருந்த வெங்கடேஷ் விஜய் நடித்த “பகவதி” படத்தோடு சரத்குமாரின் “ஏய்”, “மாஞ்சா வேலு” உள்பட பல படங்களை இயக்கியிருக்கிறார்.
இன்றைய 2கே கிட்ஸ் வில்லனாக மட்டுமே பார்த்து வரும் எஸ்.ஜே.சூர்யா அஜீத், விஜய் என இருவரையும் வைத்து தனித்தனியே இயக்கிய “வாலி”, “குஷி”படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.