cinema news
சூர்யா ஜோதிகா மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு
சூர்யா நடிப்பில் ஞானவேல் என்பவர் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. பல வருடங்களுக்கு முன் கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இப்படம் இயக்கப்பட்டதாக கூறப்பட்டது.
இதில் வில்லன் வரும் சில காட்சிகளில் வன்னியர்களின் சின்னம் ஒன்று காலண்டரில் வைக்கப்பட்டதாகவும் மேலும் வன்னியர் சம்பந்தமான குறியீடுகள் சில தென்பட்டதாக வன்னியர் சங்கங்கள் கொதித்தன.
பாமக தலைவர் ராமதாஸ் போன்றவர்களும் அன்புமணி ராமதாஸ் போன்றவர்களும் இதை எதிர்த்தனர். இருப்பினும் சூர்யா தரப்பு பெரிதாக தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.
இந்த நிலையில் ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் நிறுவன தலைவர் சந்தோஷ் நாயகர் என்பவர் தொடர்ந்த வழக்கில் போலீஸ்க்கு சைதாப்பேட்டை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
வன்னியர் சமூக மக்களின் மனதை புண்படுத்தியதாக ஜெய் பீம் படக்குழுவினருக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.