cinema news
கிட்டான் வருது வருது!…இப்போ வரல வரல?… வடிவேலு காமெடி மாதிரி ஆகுமா சூர்யா படம்.?..
‘சிறுத்தை’சிவா இயக்கத்தில் “கங்குவா”படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. படத்தினுடைய ‘டீசர்’ சமீபத்தில் வெளிவந்து வலைத்தளத்தை உலுக்கியது. இப்படி இருக்கையில் சூர்யா அடுத்தடுத்து “புறநானூறு”, “வாடிவாசல்” படங்களில் நடிக்கயிருப்பதாக செய்திகள் வந்தன.
இன்னும் பேச்சுவார்த்தை நிலையிலேயே இரண்டு படங்களும் இருப்பதாக ஒரு சில தகவலும் வந்துள்ளது. ஹிந்திக்கு எதிரான படம் “புறநானூறு” என்றும், அதனை பற்றிய செய்திகளையும் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.
இந்த படத்திற்கு சு.வெங்கடேசன் வசனம் எழுத உள்ளாராம். இவரும் சூர்யாவும் நெருங்கிய நண்பர்களாம். படத்தில் அவர் இதுவரை எழுதிக் கொடுத்த வசனங்களில் ஆக்ரோஷம் சற்று அதிகமாக இருப்பதால், அதை கொஞ்சம் குறைத்து எழுத சொல்லி இயக்குனர், தயாரிப்பு தரப்பில் இருந்து சொல்லப்பட்டதாம்.
அதை விரைவில் வெங்கடேசன் செய்வார் என எதிர்பார்க்கலாம். படத்தின் ‘ஸ்கிரிப்ட்’ மூன்று மாதங்களில் முழுமை பெற்று விடும் சொல்லியிருந்தாராம் சுதா கோங்ரா.
சுதா, சூர்யா படம் குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்களாம் சமீபத்தில். ஆனால் பேச்சு வார்த்தையில் எந்த வித சுமூக முடிவும் எட்டப்படவில்லையாம். அடுத்த கட்டத்திற்கு படம் முன்னேறுவதற்கான அறிகுறிகள் எதுவும் அந்த பேச்சுவார்த்தையில் தென்படவில்லையாம்.
இதற்கிடையில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த சூர்யாவோ “வாடிவாசல்”, “புறநானூறு” படங்கள் நிச்சயம் வரும் என உறுதி பட சொல்லி வருகிறாராம். இந்த தகவல்களை அந்தணன் சொல்லியுள்ளார்.
இதை கேட்டே நெட்டிசன்கள் வடிவேலு காமெடி கிட்டான் இப்ப வருது வருது., இல்ல வரல வரல மாதிரி தான் சூர்யா படங்களின் நிலைமை இருக்கிறது என கலாய்த்து வருகிறார்கள்.