cinema news
சோஷியல் மெசேஜ் சொல்லி போர் அடிச்சிபோச்சாம் சோனாவுக்கு!…எத்தனை நாள் தான் மனைவியாவே இருக்குறது?…
ரஜினி, கமல், அஜீத்,விஜய்,விக்ரம்,சிம்பு என முன்னனிகளுடன் நடித்தும் விட்டார் ஜோதிகா. விஜயுடன் “குஷி”யில் வந்த ஜெனியையும், அஜீத்துடன் “வாலி”யில் வந்த சோனாவையும் இன்றும் நினைவில் வைத்துருக்கிறார்கள் ரசிகர்கள்.
தனது அறிமுக படமான “வாலி”யில் சொற்ப காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும், வந்த காட்சிகளில் எல்லாம் மனதை கவர்ந்தாக சொல்லப்பாட்டது. சூர்யாவுடன் நடித்த “பூவெல்லாம் கேட்டுப்பார்” படம் இவருக்கு பெரிய திருப்புமுனையை கொடுத்தது. விக்ரமுடன் “தூள்”, கமலுடன் “தெனாலி” என சொல்லிக்கொண்டே போகலாம்.
சூர்யாவை காதலித்து திருமணம் முடித்தார். இதன் பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக தலை காட்டாமல் இருந்தார். கதாநாயகியாக கவர்ந்த ஜோதிகா, தனது அடுத்த இன்னிங்ஸில் ரஜினிகாந்துடன் நடித்த “சந்திரமுகி”யை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது.
பொதுவாக ரஜினி படம் என்றாலே அதில் அதிகமாக ஸ்கோர் செய்வது ரஜினியாக மட்டும் தான் இருக்க முடியும். ஆனால் அவரையே பின்னுக்கு தள்ளும் அளவிலான பெயரை பெற்றார் ஜோதிகா. “சந்திரமுகி”யின் ‘க்ளைமேக்ஸ்’ காட்சியில் அவர் நடித்த விதம் அப்படி. தியேட்டர்களை அலற வைத்திருந்தார்.
“ராட்சசி”, “36 வயதினிலே” என ஒரு சில தமிழ் படங்களில் நடித்து வந்தாலும், இவர் ஹிந்தி, மலையாளத்திலும் இப்பொழுது படு பிஸியாக உள்ளார்.
தமிழ் படங்களில் தொடர்ந்து நடிப்பீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜோதிகா, சோஷியல் மெசஜை அதிகமாக சொன்னாலும் சரி, மனைவி கேரக்டர்களில் மட்டும் நடித்தே வந்தாலும் அதனை பலரும் ஏற்க மட்டார்கள் என்றார்.
அதே போலே நல்ல கதை அம்சம் கொண்ட பெரிய படங்கள், அதில் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் இதனையே தான் அதிகம் எதிர்பார்த்து இருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். மேலும் இது போன்ற விஷயங்கள் அமைந்தால் தமிழ் படங்களில் அதிகம் நடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.