“சிறுத்தை” சிவா இயக்கி வரும் “கங்குவா” படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. 3டி படமான “கங்குவா” 10 மொழிகளில் வெளியாக உள்ளது. மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தை பற்றிய சூர்யா ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வருகிறது.
அஜீத் நீண்ட நாட்களாக நடித்து வரும் “விடாமுயற்சி” படத்தினை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட்டே ஆக வேண்டும என கங்கனம் கட்டிக்கொண்டு படத்தின் ஷூட்டிங் வேகமாக நடத்தப்பட்டு வருகிறது.
8 ஆண்டுகளுக்கு பிறகு தீபாவளி பண்டிகையன்று வெளியாகும் அஜீத் படம் என்ற பெயரை பெற்று விடும் “விடாமுயற்சி” நினைத்தது போல வெளியானால்.
“கங்குவா” படத்தின் படத்தினுடைய இறுதி கட்ட வேலைகள் நடந்து வருகிறது. இந்நிலையில் படம் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று விரைவில் வெளியாக உள்ளதாக பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.
அஜீத் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இதே தீபாவளி தினத்தன்று தான் “கங்குவா”வும் வெளியாக உள்ளதாம். அஜீத் போலவே சூர்யாவிற்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பின்னனி இருக்கிறது. அதனால் இந்த இரு படங்களும் வெளியானால் தீபாவளி பண்டிகை கலைகட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல விக்னேஷ் சிவன் இயக்கி பிரதீப் ரெங்கநாதன் நடித்து வரும் “எல்.ஐ.சி”, கவின் நடித்து வரும் “கிஸ்” படங்களையும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
“விடாமுயற்சி” படம் உறுதியாவதற்கு முன்னர் அஜீத் விக்னேஷ் படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. கிட்டத்தட்ட அது உறுதியான நிலையில் திடீரென தனது முடிவை மாற்றிய அஜீத் மகிழ்திருமேனியுடன் இணைந்தார்.