cinema news
என்ன வைரமுத்து சார் இப்படி செஞ்சிட்டீங்களே?…உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவில்லையே!…எங்கேயோ கேட்ட குறள்…
கவிப்பேரரசு வைரமுத்து, இவரது வைரவரிகளில் தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் எழுதியிருக்க அதில் பல வெற்றி பெற்றுள்ளது. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா என இவர் யாருடன் கூட்டணி வைத்திருந்தாலும் இவர் எழுதிய பாடல்கள் பல மிகப்பெரிய அளவிலான புகழை பெற்றுத்தந்தது. அதோடு மட்டுமல்லாமல் அதில் நடித்த ஹீரோக்களுக்கும் கூட பெயர் வாங்கி கொடுத்தது
“நேருக்கு நேர்” படத்தில் சூர்யா நடனமாடும் ‘அவள் வருவாளா’பாடலை எழுதியது வைரமுத்துவே. திருக்குறள் காமத்துப்பாலில் 1101வது குரலினை வைத்தே இந்த பாடலை எழுதி இருக்கிறார்.
” கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள”- குறள்.
பார்த்து, பேசி, நுகர்ந்து, ருசித்து, தொட்டு உணர்ந்து என ஐம்புலன்களும்
பெண்ணில் இருக்கிறது என்பதே இதன் பொருள்.
தனது காதலி சிம்ரனின் வரவை எண்ணி ஏக்கம், வருத்தம், ஆர்வத்தோடு சூர்யா நடனக்குழுவினருடன் இணைந்து பாடி, ஆடுவது தான் பாடல். இந்த குறளை மூலமாக வைத்தே தான் ‘ஏ கண்டு கேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் பெண்ணில் இருக்கு அந்த பெண்ணில் இருக்கு’ இதுவே “அவள் வருவாளா” பாடலின் இடையே வரும் வரிகள்.
இதனை எத்தனை பேர் கவணித்திருப்பார்கள் என்பது தெரியாது. ஆனால் கவிஞரின் நுணுக்கம் என்ன என்பது இதன் மூலம் தெரிகிறது. ஹரிஹரன், மறைந்த பாடகர் சாகுல் ஹமீத் இவர்கள் இருவரும் இணைந்தே இந்த பாடலை படத்திற்காக பாடியிருந்தனர்.
இயக்குனர் வசந்த் இயக்கியிருந்த “நேருக்கு நேர்”ல் தான் சூர்யா அறிமுகமானார். படத்தில் மற்றொரு கதாநாயகனாக விஜய் நடித்திருந்தார். துவக்கத்தில் அஜீத்குமார் தான் விஜயுடன் முதலில் நடிக்க இணைவதாகயிருந்தது.