Connect with us

வெள்ளி விழா நாயகன் மோகனின் பிறந்த நாள் இன்று

Entertainment

வெள்ளி விழா நாயகன் மோகனின் பிறந்த நாள் இன்று

தமிழில் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் மோகன். அழகான க்யூட்டான முகம், கன்னக்குழி சிரிப்பு போன்றவற்றால் 80ஸ் கிட்ஸ்களை கவர்ந்தவர் நடிகர் மோகன்.

80களில் கமலுக்கு அடுத்து அதிக இளம் ரசிகைகளை மோகன் கொண்டிருந்தார் என சொல்லலாம். 80களில் பெண் ரசிகைகள் இவருக்கு ஏராளம்.

இப்போது 50, 55 வயதில் இருக்கும் பல பெண்கள் 80களில் மோகனின் டை ஹார்டு ஃபேன் ஆக இருந்தார்கள் என சொல்லலாம். மோகனின் படங்கள் வெள்ளிக்கிழமை தவறாமல் ரிலீஸ் ஆகும். எல்லா படங்களும் வெற்றி பெறும்.

மோகனின் கால்ஷீட் தேடி பல தயாரிப்பாளர்கள் மோகன் தங்கி இருந்த பாம்குரோவ் ஹோட்டலில் காத்துக்கிடக்குமாம். அந்த அளவு ரசிகர்களை வைத்து இருந்த மோகனின் பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம்,பிள்ளை நிலா, இதயக்கோயில் என வெற்றி பெற்ற படங்கள் அதிகமாகும்.

90களின் ஆரம்பத்தில் வந்த உருவம் படத்தோடு மோகனின் மார்க்கெட் காணாமல் போய்விட்டாலும், தற்போதும் அவர் ஹீரோவாக ஹரா படத்தில் நடித்து வருகிறார்.

இன்று மோகனின் பிறந்த நாள் வாருங்கள் நாமும் அவரை சேர்ந்து வாழ்த்துவோம்.

பாருங்க:  கணேச மரம் கேள்விப்பட்டு இருக்கிங்களா

More in Entertainment

To Top