Latest News
அலறும் இலங்கை பிரதமரின் அலறி மாளிகை- ராஜபக்சே வெளிநாடு தப்பி ஓட திட்டம்
இலங்கையின் பிரதமராக ராஜபக்சேயும் ஜனாதிபதியாக அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி வகித்து வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களாக கடுமையான பொருளாதார பேரிழப்பு இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
இதை சரி செய்ய முயன்று அண்ணன் தம்பிகளான ஜனாதிபதியும், பிரதமரும் தோல்விதான் அடைந்தனர். இதனால் கடுமையான விலைவாசி உயர்வு ஏற்பட்டது. மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் திணறினர்.
பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வு ஏற்பட்டது, அதே நேரத்தில் அவை கிடைக்கவும் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த நேரத்தில் மக்கள் போராட்டம் தன் எழுச்சியாக நடந்தது. இந்தியாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் போல் இலங்கை காலிமுகத்திடலில் போராட்டம் நடந்தது.
ஒரு கிராமம் போல உருவாக்கி மக்கள் அங்கு தொடர் போராட்டங்களை ஒரு மாதத்திற்கும் மேலாக நடத்தி வருகின்றனர். மக்கள் கடும் போராட்டங்களை நடத்தி வந்த போதிலும் அண்ணன் , தம்பி இருவரும் பதவி விலக மறுத்து வந்தனர்.
நேற்று இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்ததால் பிரதமர் மஹிந்த ராஜபக்சே பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இருப்பினும் அவர் பிரதமர் மாளிகையை விட்டு வெளியேறாததால் ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கூடி உள்ளே நுழைய முற்பட்டனர். போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை கட்டுப்படுத்தினர்.
இந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி ஓட முயற்சி செய்து வருகிறார் என சொல்லப்படுகிறது. ராஜபக்சே வருவார் என போராட்டக்காரர்கள் விமான நிலையம் வரும் அனைத்து கார்களையும் சோதனை செய்து வருகிறார்கள்.
