Published
11 months agoon
தமிழில் எங்கள் அண்ணா படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை நமீதா. அறிமுகமான படத்தில் என்னவோ நார்மலாக தான் இருந்தார் நார்மலாகதான் நடித்தார்.
ஒரு கட்டத்தில் இவர் கவர்ச்சி வேடங்களுக்கு தாவினார். கடுமையான கவர்ச்சி காட்சிகளிலும் மிக அசால்டாக நடித்தார். அதற்கு இவரது குண்டான உடலும் ஒத்துழைப்பு கொடுத்தது.
விஜய், அஜீத் என முன்னணி நாயகர்கள் அனைவருடனும் நடித்துவிட்ட நமீதா ஒரு கவர்ச்சி ஃபாம் என்றே சொல்லலாம். இவர் நடிப்பதை விட்டு பாஜகவுக்காக பிரச்சாரம் செய்தார். பிக் பாஸில் பங்கேற்றார். ஒரு வழியாக கடந்த 2017ம் ஆண்டு தனது காதலர் வீரேந்திர செளத்ரியை திருமணம் செய்து கொண்டார். தமிழ் ரசிகர்களை மச்சான் மச்சான் என்றே அழைப்பார்.
இந்நிலையில் தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது பிறந்தநாளில் அறிவித்திருக்கிறார் நமீதா. ”தாய்மை… புதிய அத்தியாயம் தொடங்கியதும், நான் மாறினேன், மிகவும் மென்மையாக என்னுள் ஏதோ மாறியது. பிரகாசமான மஞ்சள் சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைத்தது. நான் விரும்பியதெல்லாம் நீ தான், உனக்காக இவ்வளவு நாள் வேண்டினேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள், அனைத்தையும் என்னால் உணர முடிகிறது, என நமீதா கூறியுள்ளார்.