ஒரு படம் ரிலீஸாகிவிட்டால் இப்போதெல்லாம் யாரிடம் விமர்சனம் கேட்கிறார்களோ இல்லையோ கூல் சுரேஷிடம் மைக்கை நீட்டி விடுகிறார்கள்.
மாநாடு, வலிமை, டான், பீஸ்ட் என இவரிடம் எல்லா படத்துக்கும் விமர்சனம் கேட்டு விடுகின்றனர். அதற்கு இவரும் வெந்து தணிந்தது காடு என சொல்லி வலிமைக்கு வணக்கத்த போடு, பீஸ்ட்டுக்கு வணக்கத்த போடு என சொல்லி வருகிறார்.
உணர்ச்சிவசப்பட்டு பேசுவது கூல் சுரேஷின் பாணி. கொப்பன் மவனே என்ற வார்த்தையையும் அவர் சேர்த்துக்கொண்டு பேசுவது அவர் பாணி. வழக்கம்போலவே இன்று ரிலீஸ் ஆன விக்ரம் படத்திற்கும் அவர் தன் கருத்தை கூறியுள்ளார்.
அதில் விஜய் சேதுபதியை நீங்க என்ன நெனச்சுக்கிட்ருக்கிங்க கருப்பு கமலஹாசனா நீங்க என கேள்வி எழுப்பிவிட்டு கருப்பு கமல்ஹாசன் தான் நீங்க என கமலின் நடிப்புக்கு இணையாக விஜய் சேதுபதிக்கு பட்டம் கொடுத்துவிட்டு சென்றுள்ளார் கூல் சுரேஷ்.