Entertainment
5 கோடி மோசடி- நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் புகார்
பசங்க படத்தின் மூலம் அறிமுகமாகி மக்களின் மனதில் இடம்பிடித்தவர் விமல். தொடர்ந்து இவர் நடித்த களவாணி படம் இவருக்கு பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது.
இந்த நிலையில் சில வருடங்களாக இவர் நடித்த அனைத்து படங்களும் தோல்வியடைந்த நிலையில் மிகவும் பின் தங்கி இருந்த விமல், விலங்கு வெப் சீரிஸ் மூலம் மீண்டும் முன்னணி நடிகரானார்.
இந்த நிலையில் நடிகர் விமல் ரூ.5 கோடி வாங்கி ஏமாற்றிவிட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். 2016 மன்னர் வகையறா படத்தை தயாரிக்க தன்னிடம் விமல் ரூ.5 கோடி பெற்றதாக அரசு பிலிம்ஸ் கோபி புகார் அளித்துள்ளார். ரூ.5 கோடி பெற்றுக்கொண்டு இதுவரை ரூ.1.30 கோடி மட்டுமே அளித்துள்ளதால் மீதமுள்ள தொகையை பெற்றுத்தர கோரிக்கை விடுத்துள்ளார்.
