Published
1 year agoon
விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் கடைசி விவசாயி. இப்படத்தில் கெளரவ வேடத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்தார். நல்லாண்டி என்ற வயதான பெரியவர் விவசாயியாகவே வாழ்ந்திருந்தார்.
இந்த படம் திரைக்கு வந்து பல நல்ல விமர்சனங்களை பெற்றாலும் திரையரங்கில் பெரிய அளவில் ஓடவில்லை.
இப்படத்தை மணிகண்டன் இயக்கி இருந்தார்.
இந்த நிலையில் படத்தை பார்த்த நடிகர் விமல் தெரிவித்திருந்த கருத்து என்னவென்றால்,ய்யா நல்லாண்டி கடைசி விவசாயியாகவே வாழ்ந்திருந்தார். நண்பன் சேதுவின் நடிப்பை பார்க்கும்போது.. அதில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள தோன்றுகிறது. திரைக்கதை , ஒளிப்பதிவு , இயக்கம்.. உலகத்தரத்தில் இருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.