vimal sivakarthikeyan
vimal sivakarthikeyan

தேடித் தேடி பார்த்தும் கண்ணிலே படாத விமல்?…வைச்ச நம்பிக்கை எல்லாம் வம்பா போச்சே!…

வளர்ந்து வரும் இன்றைய இளம் நடிகர்களில் திறமைகள் பலவற்றை தனக்குள்ளே கொண்டவர் விமல். “பசங்க” முதல் பாகத்தில் இவரின் நடிப்பு பாராட்டும் படியாக அமைந்ததோடு, அதன் வெற்றி இவருக்கு வாய்ப்புகள் வரிசை கட்டி நிற்க காரணமாக மாறியது.

“கேடி பில்லா கில்லாடி ரங்கா” படத்தில் சிவகார்த்திகேயன், சூரியுடன் இணைந்து கலகல நடிப்பில் கலக்கியிருப்பார். அதிலும் சிவகார்த்திகேயனின் கவுண்டர் டயலாக்களுக்கு இவர் கொடுத்திருந்த ரியாக்சன்கள் ரசிக்க வைத்தது. அதே போல சுந்தர்.சி. இயக்கிய “கலகலப்பு” முதல் பாகத்தில் மிர்ச்சி சிவாவுடன் இவர் நடித்த விதமும் பலரின் கவனத்தை ஈர்த்தது.

gilli
gilli

முகம் அறிந்த நடிகராக விமல் மாறும் முன்னரே விஜயின் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான “கில்லி” படத்தில் நடித்திருக்கிறார். விஜயின் நண்பர்களில் ஒருவராக வந்திருந்த இவருக்கு படத்தில் நடிக்கும் போது சற்று மலைப்பாகவே இருந்ததாம்.

 

விஜய் படம் எனபதால் இதில் தனக்கு பெரிய பெயர் கிடைக்கும். அதனைத்தொடர்ந்து வாய்ப்புகள் குவியும் என நம்பினாராம். ஷூட்டிங்கில் எடுத்த காட்சிகள் எல்லாம் படத்தில் அப்படியே வரும் என ஆரமபத்தில் நினைத்தாராம் விமல்.

ஆனால் படத்தில் அவர் நடித்த காட்சிகளை திரையில் பார்க்கும் போது நிறைய மாற்றங்கள் தென்பட்டதாம். காட்சிகளை திரையில் பார்க்கும் போது அவரையே அவர் தேடும் படியான நிலைதான் நீடித்ததாம் படம் முழுவதும்.

ஆனால் இப்போது பட வாய்ப்புகள் குறைவாகவே இவருக்கு இருந்தாலும் தரமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் தரமான நடிகர் என்ற பெயர் இவருக்கு இருந்து வருகிறது தமிழ் சினிமாவில்.