“மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம்” இதனை சுருக்கி”மா.பொ.சி” என தனது படத்திற்கு பெயர் வைத்தார் இயக்குனர் நடிகர் போஸ் வெங்கட். பெயர் பற்றி கேள்விப்பட்டதும் போஸை அழைத்த சிவக்குமார் இந்த பெயர் ஒரு மிகப்பெரிய நபரின் பெயர். அவரது பெயரை வைத்து டாக்குமென்டரி படம் எடுக்க இருக்கிறோம் என சொல்லி பெயரை மாற்ற கேட்டிருக்கிறாராம்.
அதன் பிறகே “மா.பொ.சி”, “சார்” ஆக மாறியிருக்கிறார். விமல், சாயா நடித்திருக்கின்றார்கள் படத்தில். குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறார் படத்தின் இயக்குனர் போஸ் வெங்கட். சித்து குமார் இசையமைத்திருக்கிறார். “பருத்தி வீரன்” சித்தப்பு செவ்வாழை தான் வில்லன்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது படம்.

ஸ்கூல் டீச்சராக விமல் – சாயா, இருவருக்குமிடையே லவ். இப்படி போய் கொண்டிருக்கின்ற நேரத்தில் தெய்வ நம்பிக்கையை காரணம் காட்டி ஸ்கூலை மொத்தமாக மூடி விட நினைக்கிறது ஒரு கும்பல். அதோடு விமல் – சாயா காதலுக்கு முட்டுக்கட்டை வருகிறது. இதை எல்லாம் தாண்டி இருவரும் எப்படி சேருகிறார்கள்.பள்ளிக்கூடம் மூடப்பட்டதா? என்பது தான் படத்தின் கதையாம்.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு கல்வி சாமி தெரியும் ஆனால் சுயநலத்திற்காக கல்விக்கூடத்தை மூட நினைக்கும் கும்பலுக்கு அது சாத்தானாகத்தான் தெரியும். இதற்கு விடை சொல்வது தான் படத்தின் முழுக்கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது சில நிமிடங்களுக்கு முன்னர் வெளியான “சார்” பட டீஸர். விமல் – சரவணன் நடிப்பு படத்திற்கு பக்க பலமாக இருக்கும் என நினைக்க வைத்துவிடுகிறது “சார்”.