cinema news
சீனை மாத்த வேணாம்ன்னு சொல்லிய ராஜ்கிரண்!…இதெல்லாம் ஒரு கதையா?…தூக்கி ஏறிய சொன்ன தயாரிப்பாளர்…
2014ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியானது “மஞ்சப்பை” படம். இயக்குனராக ராகவனின் முதல் படம் இது. ராஜ்கிரண்,விமல், லட்சுமி மேனன் உட்பட பலரும் நடித்திருந்தனர் படத்தில்.
தனது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தாராம் ராகவன். தனனுடைய அனுபவத்தையே படமாக எடுத்ததாக சொல்லியிருக்கிறார். இயக்குனர் சற்குணத்திடம் வேலை பார்த்து வந்த போது தனது கதையை அவரிடம் சொன்னாராம் ராகவன்.
கதையை கேட்ட சற்குணம் இதெல்லாம் ஒரு கதையா, மொதல்ல அத தூரபோடுன்னு சொல்லிவிட்டாராம். பின்னர் “மஞ்சப்பை” படத்தின் கதையை பற்றி பேசினாராம். அதை கேட்ட மறுகனமெ இனி இந்த கதையை வேறு யார்கிட்டயும் சொல்லக்கூடாது. நானே இந்த படத்தை தயாரிக்கிறேன் என உறுதி கொடுத்தாராம்.
தனது சிறு வயது அனுபவம் தான் கதை இருந்தாலும் பாட்டி கேரக்டரை வைத்து படத்தை எடுத்தால் அது பத்மினி, நதியா நடித்த “பூவே பூச்சூடவா” படத்தை போலவே இருக்கும் என நினைத்ததால் பாட்டியை தாத்தாவாக மாற்றினாராம். இந்த வேஷத்தில் நடிக்க பலரையும் பற்றி யோசித்து கடைசியில் தான் ராஜ்கிரனை தேர்வு செய்தாராம்.
படத்தை பற்றி விமலிடம் சொன்ன போது அவரும் ராஜ்கிரன் நடித்தால் தான் சரியாக இருக்கும் என சொல்லி இயக்குனரின் முடிவிற்கு ஆமாம் போட்டாராம். விமலின் லேப்-டாப்பை தெரியாமல் எரித்து விட்ட ராஜ்கிரன், தனது மனைவியின் தாலியை மோதிரமாக மாற்றி கையில் அணிந்திருப்பராம். அதை விற்று புது லேப்-டாப் வாங்கும் காட்சி படத்தில் வரும்.
இந்த காட்சி ஓவர் சென்டிமென்ட்டாக இருந்து விடும் என நினைத்த ராகவன் மோதிரமாக மாறிய தாலிக்கு பதிலாக ராஜ்கிரண் உழைப்பில் சம்பாத்தித்த தங்கம் என மாற்றினாராம் கதையை. ஷூட்டிங்கின் போது இதை பற்றி கேட்ட ராஜ்கிரன் முதலில் நீங்க சொன்னது வேற, இப்போ வேற மாதிரி ஷூட் பண்றீங்களே என கேட்டாராம்.
தன்னிடம் முதலில் கதை சொன்னபோது இருந்த படியே இருக்கட்டும் அது நன்றாக வரும். அதை மாற்ற வேண்டாம் என ராஜ்கிரண் அட்வைஸ் செய்தாராம். அவர சொன்னது போலவே படத்தில் அந்த காட்சிக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருந்ததாம்.