Published
1 year agoon
விமல் நடிப்பில் தற்போதுதான் விலங்கு சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த வாய்ப்புகளாக விமல் நடிப்பில் புதிய புதிய படங்கள் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் சரவண சக்தி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தின் பெயர் குலசாமி
சசிக்குமார் இயக்கிய பல படங்களில் நடித்துள்ளவர் சரவண சக்தி. மேலும் மறைந்த ரித்திஷ் நடித்த நாயகன், சில வருடங்கள் முன் ஆர்.கே சுரேஷ் நடித்த பில்லா பாண்டி படங்களை இயக்கியவர்.
தற்போது இவர் விமலை வைத்து இயக்கும் இந்த படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இப்படத்தின் மோஷன் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. விஜய் சேதுபதி இதை வெளியிட்டார்.