குழந்தைக்கு தாயான காஜல் அகர்வால்

குழந்தைக்கு தாயான காஜல் அகர்வால்

பேரரசு இயக்கிய பழனி படத்தில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால். அந்த படத்தில் பெரிய அளவில் இவர் பேசப்படவில்லை.

பின்பு சில வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் நடித்த துப்பாக்கி, அஜீத்துடன் நடித்த விவேகம், தனுசுடன் நடித்த மாரி போன்ற படங்கள் காஜல் அகர்வாலை தமிழில் முன்னணி நடிகையாக்கியது.

இருப்பினும் அதற்கு முன்பே தெலுங்கில் முன்னணி நடிகையாகவே காஜல் அகர்வால் இருந்து வந்தார்.

கடந்த 2020ஆம் ஆண்டு,  நடிகை காஜல் மற்றும் தொழிலதிபர் கவுதம் கிச்சுலு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்கு பின்பு சில படங்களில் நடித்து வந்த அவர்,  கர்ப்பமானதால், தான் நடித்து வந்த படங்களில் இருந்து விலகினார். கர்ப்பமாக இருந்த போது, சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களை பகர்ந்து வந்தார். இந்நிலையில், காஜர் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அறிந்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.