2023ம் வருஷம் தமிழ் சினிமாவ கொஞ்சம் கஷ்டம்தான் படுத்துன்னே சொல்லலாம் போல. 5மாசம் முடியப்போற நேரத்துல பெரிய ஹீரோக்கள்லாம் இன்னும் தங்களோட ரசிகர்கர்களை இன்னும் வெயிட் பண்ணதான் வெச்சிக்கிட்டு இருக்காங்க ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா, விக்ரம், சிவகார்த்திகேயன்னு லிஸ்ட் நீண்டுகிட்டே தான் போகுது.
“ரத்னம்”, “அரண்மனை-4”, இந்த ரெண்டு படங்கள் மட்டும் தான் சம்மர் ஸ்பெஷலா வந்தது. மற்றபடி வெறியேத்துற மாதிரி வேறலெவெல் படங்கள் எதும் இதுவரை வெளியாகவில்லைன்னே சொல்லலாம். இப்போ திடீர்னு பாத்தா ஒரே நாள்ல நாலு படம் ரிலீஸ் ஆகப்போது. நாளைக்கு வெள்ளிகிழமை அதுவுமா வருதே இந்த நாலுல எதுக்கு மொதல்ல டிக்கெட் புக் பண்ணலாம்னு யோசிக்கிறாங்க சினிமா வியூவர்ஸ்.

ஹிப்-ஆப் தமிழா ஆதி நடிப்பில் அனிகா சுரேந்திரின் பி.டி.சார் படம் வருது. படத்தில ஹீரோவும் நான் தான் மியூசிக் டைரக்டரும் நான் தான்ன்னு சொல்ற ஆதி இந்த படத்துல ஹீரோவா மட்டுமே நடிச்சிருக்குறார். வெற்றி, அக்ஷ்யா, ஸ்ரீதீனா நடிப்பில் ராஜ் இயக்கியுள்ள பகலறியான் படமும் நாளை தான் திரைக்கு வருகிறதாம்.
ராஜ் நிதின், மது, ஜானகிராமன் உள்ளிட்ட பலரும் நடித்த “ஆறு கண்களும் ஒரே பார்வை”, காதல் கதைகளில் கொஞ்சம் வித்யாசமானது என சொல்ல வைக்கிறமாதிரி தான் இந்த படம் இருக்மன்னு பேசப்பட்டு வருகிறது. அதே போல “பூமரக்காத்து” இந்த படமும் நாளைக்கு தான் ரிலீஸ். மொத்தத்தில் கோடை விடுமுரை முடிவடைகின்ற நேரத்தில் இப்படி நாலு படங்களை ஒரே நாளில் தொடர்ச்சியாக வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்த போகிறது கோலிவுட். படங்கள் அதிகமாக வரமால் கோடம்பாக்க சினிமா கடலில் மையம் கொண்டிருந்த நாலு புயல்கள் நாளை கரையைகடக்க உள்ளது.