வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டிய சிம்பு!…முதல் ஆளாய் உதவ முன்வந்த மன்மதன்…
simbu

வெங்கல் ராவுக்கு உதவிக்கரம் நீட்டிய சிம்பு!…முதல் ஆளாய் உதவ முன்வந்த மன்மதன்…

நடிகர் வடிவேலுவுடன் சேர்ந்து நகைச்சுவை செய்து வந்தவர் வெங்கல் ராவ். வடிவேலுவின் டீமில் சேர்ந்து நிறைய படங்களில் நடித்து வந்தார் இவர். ஆந்திர மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் இவர்.

தலையில் இருந்த கையை எடுத்தா கடிச்சிடுவாரு இந்த காமெடிக்கு ஒட்டு மொத்த தமிழ் நாடே விழுந்து, விழுந்து சிரித்தது. இதே போல தான் வடிவேலுவுடன் தேங்காய் வாங்க இவர் பேரம் பேசும் காமெடியும்.வடிவேலு டாக்டராக நடிக்க அவரிடம் நோயாளியாக வரும் சீனும் அமர்க்களப்பட்டிருக்கும்.

vengal rao
vengal rao

படத்தில் இவர் வசனம் பேசுவது கூட ரசிக்கும் விதமாக இருக்கும் படி தான் நடித்திருப்பார். திடீரென வெங்கல் ராவ் பற்றிய வீடியோ ஒன்று வைரலாக பரவியது. பக்க வாத நோயினால பாதிக்கப்பட்டள்ள இவரின் கை, கால்கள் செயல் படாமல் போகிவட்டது.

எழுந்து கூட நடக்க முடியாத நிலையில் இருந்து வருகிறார் இப்போது. அவரது வீடியோவில் தனது உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும். முன்னர் போல நடமாட முடியவில்லை,பேசவும் முடியவில்லை எனவும் சொல்லியிருந்தார் அவர்.

அதோடு திரை உலகத்தினரிடம் தனது வறுமை நிலையை எடுத்துச்சொல்லி தனது மருத்துவ செலவிற்கு உதவுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து வீடியோ பதிவை அவர் வெளியிட்டிருந்த நிலையில் அவருக்கு உதவ சிம்பு முன்வந்துள்ளார். வெங்கல் ராவின் நிலைமையை அறிந்து அவரது மருத்துவம் உள்ளிட்ட செலவுகளுக்காக இரண்டு லட்ச ரூபாயை சிம்பு வழங்கி உள்ளதாக செய்திகள் வந்தடைந்துள்ளது.

சக நடிகர் ஒருவரின் குறையை தீர்க்க முதல் ஆளாய் முன் வந்த மன்மதன் படத்தின் ஹீரோ சிம்புவை ரசிகர்கள் மனமார பாராட்டி வருகின்றனர்.