cinema news
ரஜினி விஜய்கிட்ட இதெல்லாம் கேட்க மாட்டீங்களா?…. கொதித்து எழுந்த அமீர்!…
“ராம்”, “மௌனம் பேசியதே” படங்களை இயக்கியவர் அமீர். “பருத்திவீரன்” அவரை வேற லெவலுக்கு கொண்டு சென்றது.இயக்குனரான அமீர், திடீரென நடிகராகவும் வலம் வர துவங்கினார். ஏற்கனவே பருத்திவீரன் பட பிரச்சனையை நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் மாறி மாறி அலைந்து கொண்டிருக்கிறார் அமீர்.
போதை பொருள் கடத்தியதாக சமீபத்தில் ஜாபர் சாதிக் என்பவர் காவல் துறை விசாரணை வட்டத்திற்குள் வரவழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரும், அமீரும் நெருங்கிய நண்பர்களாம். இந்த செய்தி கோடம்பாக்கத்தில் காட்டுத் தீயாய் பரவியது.
செல்லும் இடங்களில் எல்லாம் இந்த விஷயம் சம்பத்தப்பட்ட பேச்சுக்கள் அமீரின் காதில் விழுவது சகஜமாகி விட்டது போலத்தான் சூழ்நிலை அமைந்ததாக பார்க்கப்படுகிறது. சில நேரங்களில் அமீரிடம் நேருக்கு நேராகவே இது தொடர்புடைய கேள்விகள் னேருக்கு நேராக கேட்கப்படுவதையும் அமீர் எதிர்கொண்டுதான் வருகிறாரம்.
இப்படி இருக்கையில் செய்தியாளர்கள் சன்டிப்பு ஒன்றில் அமீர் பங்கேற்றிருக்கிறார். அப்பொழுது இது குறித்த கேள்வி ஒன்றை செய்தியாளர் அமீரிடம் உங்களது நண்பருக்கு பணம் எப்படி வந்தது என நீங்கள் யோசிக்கவில்லையா? என கேட்டிருக்கிறார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ‘லைக்கா’ தயாரிப்பு நிறுவனம் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கிறது. ஐரோப்பியரோவில் அவர்கள் பெரும் சவாலை சந்தித்து வருவது உங்களுக்கு தெரியுமா?. ஏன் இப்படிப்பட்ட கேள்விகளை எல்லாம் எல்லாம் ஏன் ரஜினி, விஜய் இடம் கேட்க மறுக்கின்றீர்கள்?என செய்தியாளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.
அதோடு மட்டுமல்லாமல் அந்த வழக்கு விசாரணையில் இருந்து கொண்டிருக்கிறது. காலம் அதற்கு பதில் சொல்லும் என சொல்லி இருக்கிறார் அமீர்.