Tamil Flash News
பூ மாதிரி பெண்ணுன்னு நினைச்சா இப்படி புயலா மாறி புரட்டி எடுத்தட்டீங்களே…
சினிமாவில் நாயகர்களுக்கு அடித்த படியாக முக்கியத்துவம் பல படங்களில் நாயகிகளுக்கே அதிகமாக வழங்கப்பட்டிருக்கும். கதாநாயகனின் லட்சியத்திற்கு உதவுவது, தவறான பாதையில் செல்லும் கதாநாயகனுக்கு, காதலியாக வந்து நல் வழிப்படுத்துவது என நாயகிகளின் ரோல் படங்களில் தவிர்க்க முடியாததாக இருந்திருக்கிறது.
ஒரு காலத்தில் பூவின் மென்மையைப்போல திரையில் தோன்றி, இவ்வளவு இலகிய மனம் கொண்டவரா இவர்? என தங்களது நடிப்பால் நல்ல பெயர் பெற்று, பின்னர் திடீரென தங்களின் கோர முகத்தை திரையில் தெரிய வைத்து ஆச்சரியத்தில் அதிர வைத்த நாயகிகளும் இருந்திருக்கிறார்கள் தமிழ் சினிமாவில்.
தனது லட்சியத்திற்காக தனது காதலன் என்றுகூட பார்க்காமல் கொலை செய்திருப்பார் தனுஷை “கொடி” படத்தில் திரிஷா. யாருமே எதிர்பார்திராத ஒரு திருப்பம் கதையில்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலான அனுபவத்தை தனக்குள் வைத்திருக்கும் ரம்யா கிருஷ்ணன் தனது சிறப்பான நடிப்பாலும், கவர்ச்சியால் ரசிகர்களை கிறங்கடித்து வந்தவர். திடீரென நீலாம்பரியாக மாறி ரஜினியை மட்டுமல்லாது தன்னுடைய ரசிகர்களை கூட மிரட்டித்தான் இருந்தார் “படையப்பா”வில்.
விஜய்,விஷாலுடன் ஜோடி கட்டி சில படங்களில் துரு,துரு பெண்ணாக நடித்து வந்த ரீமாசென் கூட “வல்லவன்” படத்தில் சிம்புவிற்கு வில்லியாக நிமிடத்தில் மாறி தனது நடிப்பால் அதிர வைத்திருந்தார். அதே போல அழகு பொம்மையாக படங்களில் வலம் வந்த ஷ்ரேயா ரெட்டி கூட நம்பமுடியாத வில்லத்தனத்தை காட்டியிருந்தார் விஷாலுடனான “திமிரு” படத்தில்.
1980 காலத்தில் முன்னனி கதாநாயகி, பிறகு குணச்சித்திர நடிகை என்ற அடையாளத்தை பெற்றிருந்த வடிவுக்கரசி கூட “அருணாச்சலம்” படத்தில் வில்லியாக மாறி ரஜினியை வருத்தெடுத்திருப்பார் தனது வன்மம் கொண்ட வசனங்களால்.