cinema news
எல்லாமே எம்.ஜி.ஆர்.தான் எங்களுக்கு!…ஆனால் அவருக்கு மட்டும் தான் மரியாதை…
புரட்சி தலைவர் என அன்பாக அழிக்கப்பட்டு சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்விலும் கதாநாயகனாக வாழ்ந்து காட்டியவர் எம்.ஜி.ஆர்.
ஒரு நடிகருக்கு ‘டூப்’பாக நடிக்க அவர்களைப் போலவே தோற்றம் கொண்ட வேறு ஒருவரை வைத்து காட்சிகள் எடுக்கப்படுவது தமிழ் சினிமாவில் நடந்து வரக்கூடிய ஒன்றுதான்.
எம்.ஜி.ஆரின் டூப்பாக இருந்தவர் மகாலிங்கம் மேக்கப் செய்து விட்டால் எம்.ஜி.ஆர் யார், மகாலிங்கம் யார் என வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உருவ ஒற்றுமை அப்படியே பொருந்துமாம்.
ஒருமுறை மகாலிங்கம் எம்.ஜி.ஆரை போல அந்த காட்சிக்கு தேவையான மேக்கப் போட்டுவிட்டு இருவரும் அருகருகே அமர்ந்திருக்கின்றனர்.
போன் வர, அதை அட்டன்ட் செய்ய எம்.ஜி.ஆர் சென்று இருக்கிறார் ஆபிஸிற்கு உள்ளே. அங்கிருந்த தொழிலாளர்கள் அனைவரும் வந்தது எம்.ஜி.ஆர் என அறியாமல் மகாலிங்கம் தான் என நினைத்து அவர்கள் இஷ்டம் போல சுதந்திரமாக புகைப்பிடித்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள்.
இதை கண்ட எம்.ஜி.ஆர். கோபத்தில் பதில் ஏதும் சொல்லாமல் அப்படியே அவர்களை பார்த்து முறைத்திருக்கிறார்.
தான் இருக்கும் இடத்தை சுற்றி புகை, மது வாடை அறவே இருக்க கூடாது என்பதில் மிகவும் கராராக இருப்பாராம். தனி மனித ஒழுக்கம், ஆரோக்கியம் இவற்றின் மீது தனி கவனம் செலுத்தி வந்திருக்கிறார். தொழிலாளர்களின் செயல் அவருக்கு எரிச்சலையை வரவழைத்துள்ளது.
அந்த நேரத்தில் மகாலிங்கமும் உள்ளே வர, ஆகா நாம் மகாலிங்கம் என நினைத்து நம் இஷ்டப்படி இருந்து விட்டோமே என அனைவரும் தவறை உணர்ந்து தலை குனிந்து நின்றார்களாம்.
தன்னைச் சுற்றி உள்ளவர்களில் நலனில் மிகவும் அக்கறை காட்டக் கூடியவர் எம்ஜிஆர். என்பது இதன் மூலம் தெரியப்படுத்தப்பட்டதாம்.