“மஞ்சுமெல் பாய்ஸ்” மலையாள படமா?, இல்லை தமழ் படமா?ன்னு தெரியாத அளவுக்கு கலெக்ஷன அள்ளிகுவிச்சிது. ரஜினிகாந்த்தின் “கூலி” படத்தில் தனது ‘டிஸ்கோ பாடலை. பயன்படுத்தியதாக ஆவேசமான இளையாஜா உடனே படத்தோட தயாரிப்பு நிறுவனத்துக்ககு நோட்டீஸ்லாம் அனுப்பி அது சர்ச்சையானது. இப்போ அடுத்து ஒரு அட்டாக் பண்ணியிருக்காரு ராஜா.
“மஞ்சுமெல் பாய்ஸ்” படத்தில் தனது படைப்பான ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை தன்னிடம் அனுமதி வாங்காமல் எப்படி பயன்படுத்தலாம்னு சொல்லி நஷ்ட ஈடு கேட்டும், படத்திலிருந்து அந்த பாடலை முழுவதுமாக நீக்கச்சொல்லியும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறாரே. இப்படி இவர் செஞ்ச செயலினால படம் தியேட்டர விட்டே சீக்கிரம் ஓடத்தான் போகுது, படத்தோட கலக்ஷன் கடுமையா பாதிக்கத்தான் போகுது போலயேன்னு பேச ஆரம்பிச்சிருக்காங்க நெட்டிசன்ஸ்.

பின்ன என்னங்க படம் வெளிவந்து பரபரப்பாகி அதோட சூடு தனிஞ்சி எல்லாரும் அதை மறந்த பிறகு இப்படி இவர் செய்றாருன்னு கேட்க வைச்சிட்டாங்க. காட்டுத்தீ மாதிரி பத்தி எறிஞ்ச சுசித்ரா விஷயமும் கூட இப்போ ரெண்டு, மூனு நாளா அமுங்கிப்போச்சு.
பயங்கர பரபரப்பா பேசிக்கிட்டாங்க மொபைல் போன் கையில் வச்சிருந்த நிறைய பேரு. ஆனா இப்போ எல்லாரும் அதபத்தி பேசுறத குறைச்சிக்கிட்டாங்கன்னு நிம்மதி பெருமூச்சு விடுற நேரத்துல இசைஞானியோட அடுத்த படையெடுப்பு தன்னொட வேலைகளை பார்த்துக்கிட்டு இருந்தவங்களை எல்லாம் திரும்பவும் சினிமா உலகத்தை பற்றி யோசிக்க வைத்து விட்டதுன்னு தான் சொல்லனும் போல. எப்பவோ ரிலீஸாகி இப்ப காணாமல் போன “மஞ்சுமெல் பாய்ஸ்” படத்துக்கு இப்ப ஏன் நஷ்டேஈடு கேட்டா?.