Published
1 year agoon
சமீபத்தில் அப்துல் கலாம் என்ற ஒரு சிறுவன் ஒரு தனியார் ஊடகத்தில் பேசியபோது எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்றும், ஏன் ஜாதி மதம்னு இருக்குறிங்க என்று இயல்பாக பேசினான் இந்த வீடியோ வைரலான நிலையில் அந்த சிறுவனின் வீடியோதான் இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அந்த சிறுவனை அழைத்து பாராட்டியுள்ளார். இது குறித்து முதல்வர் கூறியிருப்பதாவது.
யாரையும் வெறுக்காமல் அன்பு செலுத்தவேண்டும் எனச் சிறுவன் அப்துல் கலாம் பேசிய காணொளி கண்டு நெகிழ்ந்தேன். நேரில் அழைத்துப் பாராட்டினேன். சாதி, மதப் பாகுபாடுகளைக் கற்பிக்காமல் சிறுவனின் மனதில் அன்பையும் மனிதநேயத்தையும் விதைத்த அவரது பெற்றோரும் ஆசிரியர்களும் பாராட்டுக்குரியர் என ஸ்டாலின் கூறியுள்ளார்.