cinema news
அப்துல் கலாம், விவேக் மீது உள்ள மரியாதையால் மரக்கன்று நட்ட ஆர்யா
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு நடிகர் ஆர்யா செம்மொழி பூங்காவில் மரக்கன்றுகளை வைத்தார்.
சென்னை செம்மொழிப் பூங்காவில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடம் விழா நடைபெற்றது. இதில் நடிகர் ஆர்யா மரக்கன்றுகளை வைத்தார்.
முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் மீது மிகுந்த பற்று கொண்ட விவேக், அவரது பெயரில் பசுமை கலாம் எனும் மரம் நடும் இயக்கத்தை முன்னின்று நடத்தி வந்தார். ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்பட்டு வந்தது.
மறைந்த நடிகர் விவேக் மரம் நடுவதற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை ஏற்று தற்போது மரம் நடும் பணியை மேற்கொள்ள இருப்பதாக நடிகர் ஆர்யா தெரிவித்துள்ளார்.