Latest News
அப்துல் கலாம் சகோதரர் மறைவு- முதல்வர் எடப்பாடி இரங்கல்
முன்னாள் குடியரசுத்தலைவர் மறைந்த ஏ.பி.ஜே அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரான் லெப்பை மரைக்காயர் 105 வயதுக்கும் மேலான இவரின் மேல் அப்துல் கலாம் மிக பிரியமாக இருப்பார். தன் தாய்க்கு பிறகு தன் சகோதரர்தான் எல்லாம் என இவரை பார்க்க அடிக்கடி வருவார்.
கலாம் மறைந்த பிறகும் அப்துல் கலாம் வீட்டுக்கு வரும் பலரும் பல பிரபலங்களும் முத்து மீரா மரைக்காயரை பார்க்காமல் செல்வதில்லை.
உடல் நலம் குன்றி இருந்த முத்து மீரா மரைக்காயர் நேற்று இரவு காலமானார்.
இதற்கு முதல்வர் எடப்பாடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் மூத்த சகோதரர் திரு.முகமது முத்து மீரான் லெப்பை மரைக்காயர் அவர்கள் இன்று(07.03.2021) காலமான செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துகொள்கிறேன். pic.twitter.com/CnGJ5UNqJa
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) March 7, 2021