Published
11 months agoon
ஹெச்.வினோத் இயக்கத்தில் உலகம் முழுவதும் இன்று அஜீத் நடித்த வலிமை திரைப்படம் வெளியானது. இதனால் தமிழ்நாடெங்கும் அஜீத் ரசிகர்கள் காலையிலேயே தியேட்டர்களில் குவிந்து பல அலப்பறைகளை செய்து வருகின்றனர்.
தயாரிப்பாளர் போனிகபூருக்கு பாலாபிஷேகம், ரோகிணி தியேட்டர் கண்ணாடி உடைப்பு என பல சம்பவங்கள் நடைபெற்று விட்டது.
இந்த நிலையில் நாமக்கல்லில்
கே.எஸ் திரையங்கில் ‘வலிமை’ படத்தின் முதல் காட்சி திரையிட தாமதமானதால் தியேட்டரின் கதவில் நாட்டு வெடியை கட்டி வெடிக்க முயன்றனர். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் வெடியை அகற்றினர். இதனால் ரசிகர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து கதவை திறக்காததால் ரசிகர்கள் சுவர் ஏறி குதித்தும், வெளியேறும் கதவின் மேல் ஏறியும் குதித்து உள்ளே சென்றுள்ளனர். இது குறித்து தியேட்டர் தரப்பில், “படத்தை திரையிட உரிமம் இறுதி நேரத்தில் கிடைத்ததால் முதல் காட்சி வெளியிட தாமதம் ஆனது. இதனால் ரசிகர்களை உள்ளே விட முடியவில்லை’ என தெரிவித்துள்ளனர்.
நாட்டு வெடிகுண்டு எப்படி செய்வது என யூ டியூப் பார்த்து கற்று அதை செய்தவர் கைது
வலிமை படத்தை பார்த்துவிட்டு போதை பொருள் கடத்துபவர் குறித்து வினோத்திடம் விசாரிக்க உத்தரவு
ஹோட்டல் ஊழியரை பாராட்டிய வலிமை நாயகி ஹூமா குரேசி
வலிமை பற்றி ப்ளூ சட்டை மாறன் போட்ட மோசமான பதிவு- தயாரிப்பாளர் கோபம்
விவேகம் படத்துக்கு பிறகு மீண்டும் மிக மட்டமாக அஜீத் வலிமையை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறன்
வலிமை ரிலீஸ் ஆன தியேட்டரின் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு