தமிழில் பரத்துக்கு ஜோடியாக அறிமுகமானவர் காஜல் அகர்வால்.முதல் படமான பழனியில் அவர் பேசப்படாவிட்டாலும் பின்பு முன்னணி நடிகையாக உயர்ந்து அஜீத், விஜய், தனுஷ், கார்த்தி என முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்துவிட்டார்.
சமீபத்தில் திருமணம் செய்ய முடிவெடுத்த காஜல் தனது காதலரான கெளதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டார்.
காஜல் அகர்வாலிடம் ஹனிமுன் செல்வது குறித்து கேட்டபோது அவர் தெலுங்கில் ஆச்சார்யா என்ற படத்தில் நடித்து வருவதால் அப்படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் ஹனிமூனை தள்ளி வைத்து விட்டாராம்.
இதனால் ஆச்சார்யா படக்குழுவினர் ஆச்சரியப்பட்டு போனார்களாம்