Connect with us

அப்துல்கலாம் அண்ணன் மறைவு குறித்து விவேக் அஞ்சலி

cinema news

அப்துல்கலாம் அண்ணன் மறைவு குறித்து விவேக் அஞ்சலி

இராமேஸ்வரத்தில் பிறந்து ஏவுகணை விஞ்ஞானியாக இருந்து இந்திய நாட்டுக்கே குடியரசுத்தலைவராக இருந்து மறைந்தவர் டாக்டர் ஆபஜெ அப்துல்கலாம். இவர் ராமேஸ்வரம் வரும்போதெல்லாம் தனது அண்ணனை பார்க்க சென்று விடுவார். அவரது அண்ணன் தான் சிறுவயதில் எல்லாம் சொல்லிக்கொடுத்தவர் வளர்த்தவர் என்பதால் அப்துல் கலாமுக்கு அண்ணன் மீது மிகுந்த மரியாதை உண்டு.

இரு தினங்களுக்கு முன் 104 வயதான அப்துல்கலாமின் அண்ணன் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள நடிகர் விவேக், ஓர் அன்பு இதயம் இன்னொரு அன்பு இதயத்தின் நிழலில் இளைப்பாறச் சென்று விட்டதோ!? என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.

More in cinema news

To Top