Published
11 months agoon
இன்று முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாள் ஆகும். கடந்த 2016ம் ஆண்டு முதல்வராக இருந்தபோதே இவர் மறைந்தார். இந்த நிலையில் பிப்ரவரி மாதம் 24ம் தேதி அவருக்கு பிறந்த நாள் ஆகும்.
அதையொட்டி அவரது கட்சிக்காரர்கள் ஒரு பக்கம் நினைவஞ்சலி செலுத்தினாலும் முன்னாள் அமைச்சரான நயினார் நாகேந்திரனும் தனது நினைவஞ்சலியை செலுத்தியுள்ளார்.
ஜெ மறைந்த உடன் அதிமுகவில் இருந்து நயினார் நாகேந்திரன் பாஜகவில் சேர்ந்து தற்போது எம்.எல்.ஏ ஆகவும் உள்ளார்.
மாற்றுக்கட்சியில் இருந்தாலும் தனக்கு அரசியலில் முகவரி கொடுத்த ஜெயலலிதாவுக்கு தனது நினைவஞ்சலியை நயினார் நாகேந்திரன் செலுத்தியுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது,
ஏழை, எளிய மக்களின் பசிக்கு உணவளித்து நிறைவு தந்த தாயே… என்னை அடையாளம் கண்டு அரசியலில் முகவரி தந்தது நீயே… என் காலம் முழுவதும் நான் எந்த இடத்தில் இருந்தாலும் மனதார உன் புகழ்பாடும் என் மனமே… ஆளுமையில், அன்பில் உனக்கு நிகர் என்றும் நீயே என கூறியுள்ளார்.
நயினார் நாகேந்திரனின் கருத்துக்கு வலுக்கும் அதிமுகவினரின் எதிர்ப்பு
பசும்பொன்னுக்கு ஜெயலலிதா பயன்படுத்திய வேனில் புறப்பட்ட சசிகலா
பெரும் எதிர்பார்ப்பில் தலைவி
முன்னாள் முதல்வர் ஜெயலலலிதாவின் பிறந்த நாள் இன்று
வேதா இல்லம் நினைவு இல்லமாகுமா? போயஸ் கார்டன் மக்களிடம் கருத்து கேட்பு!
5 கோடி ரூபாய் நஷ்டம்! ஜெயலலிதாவின் தலைவி படக்குழு அதிர்ச்சி!